இன்ஸ்டிடியூஷன் ஆப் எமினென்ஸ்' என்ற பெயரில், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை
உருவாக்குவதற்கான, நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அடுத்த, 10 ஆண்டு களுக்குள், உலகின் தலைச் சிறந்த, 500 பல்கலைகள் பட்டியலில், நம் நாட்டின் கல்வி நிறுவனங்களும் இடம்பெறும் வகையில், மேன்மைமிகுந்த கல்வி நிறுவனங்கள் என்ற திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து படிக்கும் வகையில், இந்தக் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயிப்பதற்கான நெறிமுறைகளை வகுக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
சம்பளம் நிர்ணயம்
அதன்படி, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு, நெறிமுறைகளை வகுத்துள்ளது.
சுயாட்சி பல்கலை அந்தஸ்துடன் கூடியதாக, நாட்டின் பல்வேறு பகுதி களில், 20 மேன்மைமிகுந்த பல்கலைகள் நிறுவ திட்ட மிடப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ள தனியார் கல்வி நிறுவனங்களும் இதில் பங்கேற்க முடியும்.
மாணவர்களுக்கான கல்வி கட்டணம், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமனம், அவர்களுக்கு சம்பளம் நிர்ணயம் உள்ளிட்ட அனைத்து பொருளாதார மற்றும் நிர்வாக சுதந்திரமும், இந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மத்திய அரசின் நெறி
முறைகளுக்கு ஏற்ப, அதற்கு கட்டுப்பட்டு இந்தக் கல்வி நிறுவனங்கள் செயல்படும்.
10 கல்வி நிறுவனங்கள்
இந்த கல்வி நிறுவனத்தில், நம் நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள, அதே நேரத்தில் பொருளாதார ரீதியில்பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இந்தக் கல்வி நிறுவனங்கள் துவங்குவதற்காக அனுமதியை அளிக்கும் வகையில், மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவை, மத்திய அரசு அமைக்க உள்ளது.இந்தக் குழுவினர் விண்ணப்பங்களை பரிசீலித்து, நேரில் ஆய்வு செய்து, மேன்மைமிகுந்த கல்வி நிறுவன அந்தஸ்தை அளிப்பர். முதல்கட்டமாக, 10 கல்வி நிறுவனங்களை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிறுவனத்துக்கும், ஐந்து ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாயை, மத்திய அரசு அளிக்கும். இதற்கான அனுமதியை, மத்திய அமைச்சரவை சமீபத்தில் வழங்கியுள்ளது.
மேன்மைமிகுந்த கல்வி நிறுவனங்கள் துவங்குவதற்கு அனுமதி அளித்ததுடன், நெறிகாட்டு வழிமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதால், விரைவில், இந்தக் கல்வி நிறுவனங்கள் செயல்
படத் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.