நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன?


ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டும் பல்வேறு விற்பனை மையங்களிலும்
ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. இதை தவிர்த்து ஆன்லைனிலும் முன்பதிவு நடத்தப்பட்டது.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இலவச ஜியோ போன் முன்பதிவு நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் ஜியோ இணைய பக்கம் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஜியோபோனை வாங்க சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதால், முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு மீண்டும் துவங்கும் போது தெரிவிக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...