அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது
என, முதல்வர் பழனிசாமி அணி நிறைவேற்றிய தீர்மானத்தை, ஒரு வாரத்தில் ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், முதல்வர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் படும்' என, தினகரன் அணி மிரட்டல் விடுத்துள் ளதாக தெரிகிறது.
இது குறித்து, தினகரன் ஆதரவாளர்கள் கூறிய தாவது: மதுரை, மேலுாரில், தினகரன் அணியி னர், நேற்று முன்தினம் நடத்திய பொதுக்கூட் டத்தில், 20 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்கவிருந்த, மூன்று எம்.எல்.ஏ.,க்களை கடத்தி விட்டனர்.
மேலும்,கருணாஸ், தனியரசு,தமிமுன்அன்சாரி
ஆகிய, அ.தி.மு.க., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், தினகரனுக்கு ஆதரவாக உள்ள னர். இந்நிலையில், தினகரனுக்கு எதிராக நிறை வேற்றிய தீர்மானத்தை, ஒரு வாரத்திற்குள் ரத்து செய்ய வேண்டும்.
இந்த நிபந்தனையை, ஒரு வாரத்தில் நிறைவேற்ற வில்லை என்றால், முதல்வர்பழனிசாமி மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும். அதை வலியுறுத்தி, ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 23 பேரும் கையெழுத்திட்ட கடிதம், கவர்னரிடம் வழங்கப்படும். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி, புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சியில் இறங்குவோம்; அமைச்சரவையை மாற்றி அமைப்போம். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியை இழக்க மாட்டோம். இதை, தினகரன் சார்பில், பழனிசாமிக்கு தெரிவித்து விட் டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், மேலுார் பொதுக்கூட்டத்தில் பங் கேற்ற, 20 எம்.எல்.ஏ.,க்களில், 12 பேர், நேற்று முதல் வர் பழனிசாமி தரப்பினரை தொடர்பு கொண்டுவிளக் கம் அளித்துள்ளனர்.'சசிகலாவின் குடும்பத்தினர், கண்டிப்பாக, அக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வற்புறுத்தினர். வேறு வழி தெரியாமல், நாங்கள் பங்கேற்றோம். நமது ஆட்சிக்கு எதிரான நிலைப் பாட்டை எடுக்கும் முடிவு எங்களுக்கு இல்லை. பழனிசாமியின் அரசுக்கு எதிராக, நாங்கள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம்' என, விளக்கம் அளித்துள்ளதாக, கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
பழனிசாமி அரசுக்கு மிரட்டல் விடுக்க, ஒன்பது பொதுக்கூட்டங்களை நடத்த, தினகரன் திட்ட மிட்டுள்ளார். முதல் கூட்டம், மேலுாரில் நடத் தப்பட்டது. வரும், 23ல், சென்னை, ஆர்.கே. நகரில், அடுத்த பொதுக்கூட்டம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.இந்த கூட்டம் நடத்தும் பொறுப்பு, சென்னையை சேர்ந்த, இரு மாவட்ட செயலர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது