சென்னை மெட்ரோவின் பண்டிகை தள்ளுபடி!


பண்டிகை தினம் மற்றும் தொடர் விடுமுறையைச் சிறப்பிக்கும் விதமாகச் சென்னை
மெட்ரோ 20 சதவிகித கட்டண சலுகையை பயணிகளுக்கு அறிவித்துள்ளது.

இன்று( ஆகஸ்ட் 25) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகள் விடுமுறை நாட்களாக இருப்பதால், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகையை தொடர்ந்து, பயணிகளுக்குத் தினசரி பயணச்சீட்டு, டோக்கன்கள், ஸ்மார்ட் அட்டைகளுக்கு 20 சதவிகித சலுகை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த சிறப்பு கட்டண சலுகையானது வெள்ளிக் கிழமை முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டது முதல் சுமார் 95 லட்சத்து 87 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். மெட்ரோ சுரங்கபாதை ஆரம்பிக்கும் முன் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். சுரங்கபாதை ஆரம்பித்த பிறகு, ஒருநாளைக்கு சுமார் 22 ஆயிரம் முதல் 24 ஆயிரம் பேர் வரை பயணிக்கின்றனர். டிக்கெட் கட்டணம் மூலம் இரண்டு ஆண்டுகளில் 35 கோடியே 64 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.

மேலும் மெட்ரோ ரயில் சேவையினை விரிவுபடுத்த பல்வேறு புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘இலவச சைக்கிள் சேவை’ தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...