அரசு ஊழியர்கள் போராட்டத்தை குறை கூறும் அறிவாளிகள் தயவு செய்து இதை படிக்கவும்.,,,!!

உங்களை மாதிரி எத்தனை பேர் கிளம்பி இருக்கிங்க  அரசு ஊழியர்களை குறை கூற,,,,,

குறை கூறுவதற்கு முன் ஒரு நிமிடம்  இதை படிங்க

அரசு ஊழியர்னா எல்லாரும்  லஞ்சம் வாங்குவாங்கனு அர்த்தமா,,,,.

அரசு ஊழியர்கள்ள பல துறைகளில் வாங்குகிற சம்பளத்துக்கு மேல ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது அது தெரியுமா.


என்ன இது ரமணா படமா இல்ல இந்தியன் படமா,,,,

பேங் ல கோடி கோடியா பணத்தை பார்த்தாலும்  ஒரு ரூபா குறைந்தால் கூட கையில இருந்து கட்ட வேணும் தெரியுமா?

இரவு பகல் பாக்காம பனி ,, மழை பாக்காம குடும்பத்தை விட்டுவிட்டு மைனஸ் 50 டிகிரில எல்லையில பாதுகாப்பு பணியில் இருக்குறேமே அது உங்க கண்களுக்கு தெரியாதா ?

பெரிய பெரிய அதிகாரிங்க லஞ்சம் வாங்குனா எல்லாரும் வாங்கறாங்கனு அர்த்தமா,,,,

பத்து பைசா கூட லஞ்சம் வாங்காம எத்தனை கடை மட்ட ஊழியர்கள் இருக்காங்கனு தெரியுமா,,,,,

எதுவுமே தெரியாம மொத்தமா எல்லா  அரசு ஊழியர்களை குறை கூறுவது

மேலே அன்னார்ந்து  பார்த்து எச்சில் துப்புவதற்கு சமம்,,,,,,

அரசு ஊழியர்கள் இல்லாம உங்கள் வாழ்க்கையில்  எந்த வேலையும் நடக்காது.,,,,

அரசு மருத்துவமைலை ராத்திரி 12 மணிக்கு ஆப்ரேஷன் நடக்குதா இல்லையா னு போய் பாரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம்  போய் பாரு 9 மணிக்கு மேலயும் வேலை செய்ற நேர்மையான எத்தனை அரசு ஊழியர்கள் இருக்காங்கனு தெரியும்.,,,,

சனி , ஞாயிறு., பண்டிகை தினம் கூட  பாக்காம பணிக்கு செல்பவர்களை நீங்கள் பார்த்தது இல்லையா அரசு பள்ளி போய் பாறுங்க சொந்த வேலையை விட்டுட்டு Special Class எடுக்கிற எத்தனை ஆசிரியர்கள்  இருக்காங்கனு .,,,,,,

வெளிநாட்டு நிருவனங்களுக்காக லட்சக் கணக்குல சம்பளம் வாங்கிட்டு Ac room ல வேலை செய்றவங்களுக்கு மத்தியில சில ஆயிரங்களை பெற்று கொண்டு பொது மக்களுக்காக வேலை செய்ற எங்களை குறை கூற உங்களால எப்படி முடியுது.,,,,,

யாரோ ஒரு தாய், யாரோ ஒரு பெண் தன் கணவன் பிள்ளைக்கு துரோகம் செய்றாங்கனா எல்லா தாயை யும் குறை கூற முடியுமா,,,,,,,,,

மழை, வெள்ளம் வந்தால் தன் குடும்பத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்யும் காவல்துறை, தீயனைப்புதுறை, மின்சாரவாரியம், இரானுவம், இரயில்வே,ஊராட்சி அலுவலர்கள்,போக்குவரத்துறை, போன்றவர்களை நீங்கள் மறந்தால் அது கடவுளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் ஆகாதா? "

இரவு இரயில்ல ஏறி நிம்மதியா படுத்து காலையில போக வேண்டிய இடத்துல இறங்குறீங்களே உங்களுக்கு தெரியுமா நீங்க உறங்கிட்டே போறதுக்காக எத்தனை இரயில்வே ஊழியர்கள் இராத்திரி பூரா கண்விழிக்குறாங்கன்னு ?

அது போன்ற சமயங்களில் மட்டும் அரசு ஊழியர்கள் தேவை மற்ற சமயங்களில் தேவையில்லையா?

தனி ஒருவன் படத்தில் ஒரு அருமையான வசனம்
் " ஒரு  இருப்பிட சான்றோ, வருமான சான்றோ, அது போன்று எது வேண்டும் எனிலும் அதற்கான கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் ஆனால்  கடைசி நேரத்தில்தான் அனைவரும் செல்கின்றனர் சான்றுகள் சீக்கிரம் வேண்டும் என நீங்களே லஞ்சம் கொடுத்து வாங்கி விட்டு அரசு அதிகாரிகளை ஏன் குறை கூறுகிறீர்கள்?"

1990ல் இருந்த விலைவாசி இப்பொழுதும் இருந்தால் நாங்களும் 1990ல் இருந்த அதே சம்பளம் பெற்று கொள்கிறோம் .

வேலையில்லா பட்டதாரி என்பதற்காக எதைபற்றியும் முழுசாக தெரியாமல் படித்த திமிரில் அதி மேதாவி தனமாக அரசு ஊழியர்களை குறை கூற உங்களுக்கு தகுதி இல்லை :

18 மாதம் வேலை செய்தால் வாழ்நாள் முழுவதும்  பென்சன் பெறுகிறார்கள் MP MLA ..,,,,,இதை தட்டி கேட்க ஒருவருக்கும் துப்பில்லை

30 வருடம் அரசுக்கும் மக்களுக்கும் வேலை செய்கிறோம்,,,,, எங்களுக்கு பென்சன் தர அரசு மறுக்கிறது..,,, அரசு ஊழியர்கள் வயிறு பற்றி எரிகிறது..,,,,,

தயவு செய்து பற்றி எரியும் வயிற்றில்  எண்ணை ஊற்றாதிர்கள்.,,,,,,

எங்கள் சுயநலத்தை மறந்து விட்டு பொது நலத்துக்காக 1 ரூபாய் கூட லஞ்சம் பெறாத ஆயிரக்கணக்கான  அரசு ஊழியர்களில் ஒருவன் நான்  என்பதை பெருமையுடன்  கூற கடமை பட்டுள்ளேன்.,,,,,

நீங்கள் நேர்மையான அரசு ஊழியர் என்றால்,, அல்லது உங்கள் குடும்பத்தில் நேர்மையான அரசு ஊழியர்கள்  இருந்தால்,,,,,, இதை பகிருங்கள்.,,,,,

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...