அமெரிக்காவிலிருந்து அரசுப் பள்ளிக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியை!


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து ஒருவர் ஸ்போக்கன் இங்கிலீஷ்
பயிற்சி வழங்கிவருகிறார்.

சேலத்தை அடுத்துள்ள கந்தம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி 1926ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக இருந்து, கடந்த 2004ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குதான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்பள்ளியைச் சுற்றி ஏராளமான தனியார் பள்ளிகள் உள்ளன. இருந்தும்கூட, இந்தப் பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையும் மாணவர்களால் நிரம்பி வழிகிறது.

அடிப்படை வசதிகளுக்கு எந்தவித குறையும் இல்லாமல் அனைத்து வசதிகளும் நிறைந்து, மேஜையுடன் கூடிய இருக்கை, சுத்தமான குடிநீர், நவீன கழிவறை, வளரிளம் மாணவிகளுக்காகக் கழிவறையில் ‘நாப்கின்’ எரியூட்டி இயந்திரம், பளபளக்கும் டைல்ஸ் தரைத்தளம் என அடிப்படை வசதிகள் நிறைந்து காணப்படுகிறது இந்தப் பள்ளி. நடுநிலைப் பள்ளியாக இருந்தாலும்கூட இங்கு சிறிய அளவிலான அறிவியல் ஆய்வகம் செயல்படுவது மட்டுமல்லாமல் நூலக வசதியும் உள்ளது.

இதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் ஈரோடு தமிழரான மித்ரா என்னும் ஆசிரியை மாணவர்களுக்கு இணையத்தின் வழியாக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பும் கற்பித்து வருகிறார். வாரத்தில் மூன்று நாள்களுக்கு 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு இப்பயிற்சியை வழங்கி வருகிறார். இதில் இன்னும் ஒரு நன்மை என்னவென்றால் மாணவர்களுக்குப் படக்காட்சிகள் மூலமாக பாடங்களில் ஆர்வம் ஏற்படுத்த ‘4டி அனிமேஷன்’தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். பெரிய தொடு திரை, புரொஜக்டர், இணைய வசதி என நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.



வகுப்பறையின் மொட்டை மாடியில் மூலிகைச் செடிகள், காய்கறி செடிகள், கீரைகள் என மாடித் தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தோட்டத்தில் அவ்வப்போது கிடைக்கும் காய்கறிகள், கீரை மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்படுகிறது. இத்தகைய பல சிறப்புகளின் காரணமாக இந்த அரசுப் பள்ளி தமக்கென தனித்துவ அடையாளத்தைப் பெற்றிருப்பதுடன், மக்களின் அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்று வளர்ந்து வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...