சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிக்கபட்டதன் எதிரொலி காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயங்கர கலவரம் !!

பஞ்ச்குலா பகுதியில் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதி போர்களமானது. இது வரை 5 பேர் பலியானதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை இராணுவ படை மற்றும் செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்குதல்!

சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசு ஆலோசணை மேற்கொண்டு வரும் நிலையில் இரு மாநிலங்களிலும் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*டெல்லியில் உஷார் நிலை!*


கலவரம் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் அண்டை மாநிலங்களான இமாச்சல் பிரதேஷம், உத்தர பிரதேஷம் மற்றும் டெல்லியிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தபட்டுள்ளது.


*எரிகிறது ஹரியானா மற்றும் பஞ்சாப்!*

பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைப்பு! மின் விநியோக மையம், ஷாப்பிங் மால்கள், போலீஸ் வாகனங்கள், செய்தியாளர்களின் நேரடி ஒளிபரப்பு வாகனங்கள், கார், பைக் என கண்ணில் பட்டதை எல்லாம் எரித்து வரும் அவலம் அரங்கேறி வருகிறது.

இரு மாநில முதல்வர்களும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கலவரம் மேலும் பரவாமல் தடுக்க இணைய தள சேவையை முடக்கி உத்தரவு பிறப்பித்தது அரசுகள்!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...