மராட்டிய அரசு 2004–ம் ஆண்டு அரசு வேலைகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும்
சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சில வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதற்கான அரசாணையையும் வெளியிட்டது.
இந்நிலையில் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 4–ந் தேதி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் மாராட்டிய அரசு ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான வேலைகள் நடந்து வருவதாக மாநில சமூகநீதி துறை மந்திரி திலிப் காம்லே தெரிவித்தார்