ஆண்டுகள் கடந்து உயிர்ப்புடன் இருக்கும் முதல் தேசியக்கொடி!!



நாடுபகுதிகளிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு,
சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர பெற்ற அன்று ஏற்றப்பட்ட தேசியக் கொடி ஒன்று இன்றும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி.இந்தியாவிலேயே சுதந்திரம் பெற்ற அன்று ஏற்றப்பட்ட கொடிகளில் இன்றும் இருப்பது இந்த கொடி மட்டும் தான். இந்த கொடி புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கொடி 2013 ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி தான் முதல் முதலில் பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டது.காற்றுபுகாத மரப்பெட்டியில், கண்ணாடியால் மூடப்பட்டு 70 ஆண்டுகளாக இந்த தேசியக் கொடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பெட்டிக்குள் ஈரப்பதத்தை உறிஞ்ச இந்த கொடியைச் சுற்றி 6 கிண்ணங்களில் சிலிகா ஜெல் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற மாசுபாடுகளால் கொடி பாதிக்கப்படாமல் இருக்க குளிரூடப்பட்ட இருட்டு அறையில் கொடி வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் வரும் போது மட்டுமே இந்த அறையில் விளக்குகள் போடப்படுகிறது.

சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதியன்று நாட்டின் பல்வேறு

12 அடி அகலமும், 8 அடி உயரமும் கொண்ட சுத்தமான பட்டு துணியால் ஆன இந்த கொடி 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை 5.05 மணிக்கு, ஆயிரக்கணக்கோனோர் முன்னிலையில் புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்டுள்ளது. இந்த கொடி யாரால் ஏற்றப்பட்டது என்பதற்கான குறிப்புக்கள் ஏதும் இல்லை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...