தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும்? ஒரு கணிப்பு !!

பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழக்கும். இதனால் ஆட்சியை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த கவர்னர் உத்தரவிடமாட்டார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பெரும்பான்மை கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்; எதிர்கட்சியான திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் உள்ளன. எடப்பாடி தரப்பில் 112 அல்லது 113
இடங்கள். இதனால் மீண்டும் அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்; அது சாத்தியம் இல்லாதது என்பதால் அவரை அழைக்க முடியாது. அதே சமயம், தேர்தல் நடத்தாமல் 6 மாதம் சட்டப்பேரவையை சஸ்பெண்ட் செய்யலாம். அதற்குள் தினகரன் அணி எம்எல்ஏக்கள் 19 பேரும் கொறடா உத்தரவை மீறிவிட்டதாக பதவி இழக்கச் செய்வது. அதன்படி பார்த்தால், தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 இடங்களில் ஜெயலலிதா இறந்தததால் உருவான காலியிடம், தற்போது டிஸ்மிஸ் செய்வதால் உருவான 19 இடம் என்று 20 இடம் போக மீதம் 214 இடங்கள் இருக்கும்.

அதில் மெஜாரிட்டிக்கு 108 உறுப்பினர்கள் தேவை. அதில் எடப்பாடி அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும். அதன்பின் காலியாக உள்ள 20 இடங்களுக்கு 6 மாதத்தில் தேர்தல் நடக்கும். அதன்பின் நடக்கும் நிகழ்வுகளை காலங்கள் முடிவு செய்யட்டும் என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதேபோலத்தான் கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா அரசு செய்தது. இதற்கு கர்நாடகா மாநில உயர்நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பளித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பளித்தது. அதற்குள் எடியூரப்பாவின் ஆட்சி காலம் முடிந்து விட்டது. இதை எல்லாம் மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...