அதிமுக பொதுச்செயலாளர் யார்? : தேர்தல் ஆணையம்!


அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது பற்றி இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை
என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொதுக்குழு உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டார். பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தபோது, பன்னீர் அணி சார்பில், தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக என்கிற பெயரும், இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க இரு அணிகளும் மாறி மாறி லட்சக்கணக்கில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், சென்னை தி.நகரை சேர்ந்த சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் அதிமுக பொதுச்செயலாளர் யார்?, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் யார் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எப்போது பொறுப்பேற்றுக் கொண்டார் போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம்,' அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை, அதிமுக-வில் தற்காலிக உட்கட்சி பிரச்னை நிலவுவதால்,கட்சியின் நிர்வாகிகள் யார் என்பது பற்றி இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை' என்று குறிப்பிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...