'ஜெயலலிதா இல்லம் அரசுடைமை ஆக்கப்படும் என அறிவித்திருப்ப
தில் தவறில்லை. இது பற்றி அவர், ஏதேனும் உயில் எழுதி வைத்துள்ளாரா என்பதை அறிந்து, முறையாக அணுக வேண்டும். ''கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்பட்டால், எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை நிரூபிப்போம்,'' என்று, தினகரன் கூறியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா மரணம் குறித்து, நீதி விசாரணைக்கு உத்தர விட்டும், போயஸ் கார்டனில், ஜெயலலிதா வாழ்ந்த, 'வேதா' இல்லம்,அரசு உடமையாக்கப் படும் என்றும்,தமிழக முதல்வர், பழனிசாமி,நேற்று முன் தினம் அறிவித்தார்.இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ள சசிகலாவை சந்திப்பதற் காக, அவர் அக்கா மகன், தினகரன், நேற்று வந்தார்.
அவரது மனைவி, அனுராதா, மகள், ஜெயஹரினி, புதுச்சேரி எம்.பி., கோகுலகிருஷ்ணா, குடியாத்தம், எம்.எல்.ஏ., ஜெயந்தி பத்ம நாபன் உடன் சென்றனர். சசிகலாவுக்கு நேற்று, 63 வது பிறந்ததினம் என்ப தால், இனிப்பு, பழங்கள் வாங்கி சென்றனர். கைதிகள் அனைவருக்கும், சசிகலா தரப்பில் இனிப்பு வழங்கப் பட்டதாக, சிறைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டது.
பின், செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது: நீதி விசாரணை நடந்தால் தான், சசிகலா குற்றமற்ற வர் எனத் தெரியவரும் என,மேலுார் கூட்டத்தில் கூறியிருந்தேன். ஜெயலலிதா இல்லத்தை அரசு டமை ஆக்குவது பற்றி, அவர், ஏதாவது உயில் எழுதி வைத்திருந்தாரா என்பதை அறிந்து, முறையாக அணுக வேண்டும். கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, தொண் டர்களின் விருப்பத்துக்கு எதிராக, பதவியை காப்பாற்ற நடத்தப்படும் இணைப்பு, நீண்ட காலம் நீடிக்காது.
தேவை ஏற்படும்போது, எங்களுக்கு ஆதரவாக உள்ள, எம்.எல்.ஏ.,க் களின் பலத்தை நிரூபிப் போம். ஜெ.,மரணம் குறித்த நீதி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்