கின்னஸ் சாதனையில் சிரிப்பு யோகா!!


ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சிரிப்பு யோகா
நிகழ்வு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா சமூக அறிவியல் நிறுவனம் சார்பில் சிரிப்பு யோகா வகுப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய பழங்குடியினர் குடியிருப்புக் கல்லூரியைச், சேர்ந்த 15,991 மாணவ மாணவிகள் உலக சமாதானத்திற்காக ஒரே இடத்தில் திரண்டு சிரிப்பு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரே இடத்தில் இத்தனை பேருக்குச் சிரிப்பு யோகா கற்பிக்க நடைபெற்ற நிகழ்வு, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.

இதனை கின்னஸ் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தின் அதிகாரியான ஸ்வப்னில் டங்கரிகர் என்பவர் நேற்று(ஆகஸ்ட்-29 )உறுதி செய்தார். பின்னர் கலிங்கா சமூக அறிவியல் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் அச்சூட்ட சமந்தாவுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு சிரிப்பு யோகாவில் 1126 பேர் பங்கேற்றதற்காக கின்னஸ் சாதனை வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அச்சூட்ட சமந்தா, “ யோகா பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நன்றி. இது ஒடிசாவுக்கு மட்டும் பெருமை கிடையாது இந்தியாவுக்கே பெருமை "என்று கூறினார்.

தற்போது மூன்றாவது முறையாக இந்நிறுவனம் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...