கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பொதுமக்கள் முற்றுகை!!


காரிமங்கலம் அருகே கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பொதுமக்கள் ஊராட்சி
ஒன்றிய தொடக்கப்பள்ளியை முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் அடிலம் ஊராட்சி சிக்கதிம்மனஅள்ளயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கேசவன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் 2 உதவி ஆசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதனால் தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி பொதுமக்கள், காரிமங்கலம் உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் ஆசிரியர் நியமனமோ மாற்றுப்பணியில் ஆசிரியர் நியமனமோ இதுவரை செய்யப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில் கிராம கல்விக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் தாசில்தார் கண்ணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பள்ளிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. இதனால் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...