காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள்
பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். டெங்கு காய்ச்சல் காரணமாக பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லியில் மட்டும் 657 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லி பகுதியில் அதிகளவு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது