முன்கூட்டியே வருகிறது லோக்சபா தேர்தல்??


அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சில மாநிலங்களின் சட்டசபை தேர்தலுடன்
சேர்த்து, 2019 ம் ஆண்டு நடைபெற வேண்டிய லோக்சபா தேர்தலையும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட மாநில சட்டசபைகளின் பதவி காலம் 2018 ம் ஆண்டு முடிவடைகிறது. இதனால் இம்மாநிலங்களுக்கான தேர்தல் 2018 ம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டும். அரசுக்கு வரும் கூடுதல் செலவுகளை கட்டுப்படுத்த, இம்மாநில சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்து 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடக்க வேண்டிய லோக்சபா தேர்தலையும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், லோக்சபா தேர்தலை ஒட்டியே தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட வேண்டிய நெருக்கடி ஏற்படுவதால் மாநில சட்டசபை தேர்தல்களையும், லோக்சபா தேர்தலையும் ஒன்றாகவே நடத்தி முடித்து விட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவு குறித்து தேர்தல் கமிஷனும் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...