ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவை, 'போலியோ' இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனம்
அறிவித்துள்ளது. ஆப்கன், நைஜீரியா மற்றும் பாகிஸ்தானில் இன்னும் போலியோ பாதிப்பு காணப்படுகிறது. இந்நிலையில், சோமாலியாவில், அரசின் தீவிர முயற்சியால் போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது. 2014க்கு பின், சோமாலியா வில், போலியோ பாதிப்பு ஏற்படாதது உறுதி செய்யப் பட்டது.இதையடுத்து, சோமாலியாவை, போலியோ இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனத்தின் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்தியத்துக்கான தலைவர், முகமது பிகி அறிவித்தார்.இது குறித்து, சோமாலியா அதிபர், முகமது அப்துல்லாஹி பர்மாஜோ கூறியதாவது:
பல ஆண்டுகளாக, குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டனர். இந்த நோயை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், மூன்று ஆண்டுகளாக, ஒரு குழந்தை கூட போலியோவால் பாதிக்கப்படவில்லை. போலியோ ஒழிக்கப்பட்டதில், இளைஞர்கள் பெரும் பங்காற்றினர்.
இவ்வாறு அவர் கூறினார்