பல்கலை மானியக்குழு தடை, ஐகோர்ட் உத்தரவு என எதையுமே மதிக்காமல்,
பாரதி யார் பல்கலை சார்பில், தொலைதுாரக் கல்வி மையங்கள் நடத்தப்பட்டு, விதவிதமான பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது; ஆனால், எந்த நடவடிக்கை யுமே எடுக்காமல், தமிழக உயர் கல்வித்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
நம் நாட்டில், நான்கு விதமான கல்வி நிறுவ னங்கள் நடத்துவதற்கு, இந்திய அரசியலமைப் புச் சட்டம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, அரசு சார்பிலும், அரசின் நிதியுதவியுடனும், முழுக்க முழுக்க சுயநிதியில் தனியாராலும் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, அரசியலமைப்பு உரிமை களின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் சார்பில், பல்கலைகள் நடத்தவும் அனுமதிக்கப் படுகிறது.
விதிமுறைகளுக்கு பஞ்சமில்லை!
அரசால் நடத்தப்படும் பல்கலைகளுக்கு,மத்திய அரசின் பல்கலை மானியக்குழு(U.G.C.,)சார்பில், நிதி வழங்கப்படுகிறது. இந்த பல்கலை நிர்வா கங்களின் கீழ், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் இணைக்கப்படுகின் றன. பல்கலை மானியக்குழு வகுத்துள்ள விதி முறைகளின்படி மட்டுமே, இந்த கல்லுாரி களில் பாடத்திட்டங்கள், பட்டப்படிப்புகள் நடத் தப்பட வேண்டும்; கல்லுாரிகளின் கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம் போன்றவற்றுக்கும் ஏராள மான விதிமுறைகள் இருக்கின்றன.
பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லுாரி களில், தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத் துவது போன்றவையும் பல்கலை மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியே நடத்தப்படு வது அவசியம். இக்கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு, அவரவர் பெற்றுள்ள பிளஸ் 2 மதிப்பெண் அல்லது இளங்கலை பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம் அடிபடையிலேயே, முறையே இளங்கலை மற்றும் முதுகலை படிப் புகளில், மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
மாணவர்களின் செமஸ்டர் வருகைப்பதிவு, படித்து தேர்வை எதிர்கொள்ளும் விதம் ஆகிய வற்றை மதிப்பிட்டே, ஒரு மாணவர் பட்டம் பெற முடியும். ஆனால், சமீபகாலமாக, தமிழ கத்தில் பெட்டிக்கடை போன்ற கட்டிடங்களில், தொலைதுாரக் கல்வி மையம் என்ற பெயரில், பட்டப்படிப்புகள், தெருவோரக்கடையில் விற் கப்படும் காய்கறிக் கூறு போல கூவிக்கூவி விற்கும் அவலம் உருவாகியுள்ளது.
இந்த முறைகேட்டில், முதலிடம் பிடித்துள்ளது, கோவை பாரதியார் பல்கலைக்கழகம்.ஏழை, எளிய மாணவர்கள், பணிக்குச் செல்வோர் ஆகியோர், மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்பதற்காகவே, தொலை துார கல்வி மையங் களை நடத்திக்கொள்ளலாம் என்று பல்கலை மானியக்குழு அனுமதி அளிக்கிறது. இவற்றை கண்காணிக்க, தொலைதுாரக் கல்வி அமைப்பு (Distance Education Bereau) என்ற அமைப்பும், யு.ஜி.சி.,யின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பு, தொலைதுாரக் கல்வி மையங்களு க்கு, பல்வேறு வரன்முறைகளையும் உரு வாக்கியுள்ளது.
எல்லை தாண்டிய 'சேவை'
இந்த விதிகளின்படி, ஒவ்வொரு பல்கலையும் அதனதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே, இந்த மையங்களை நடத்திக் கொள்ள வேண்டும்; அவற்றையும் பல்கலை நிர்வாகமே நடத்த வேண்டும். பல்கலை அனுமதித்துள்ள பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே, இந்த மையங் களில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், இவை எதையுமே பாரதியார் பல்கலை நிர்வாகம் மதிப்பதே இல்லை.
சி.பி.ஓ.பி., (Centre for Participatory and Online Programme), சி.சி.ஐ.ஐ., (Centre for Colabration of Industries and Institutions), சி.பி.பி., (Centre for Participatory Programme) என பல்வேறு
பெயர் களில், தொலைதுார கல்வி மையங்களை உருவாக்க அனுமதியை வாரி வழங்கியுள்ளது. கடந்த 2007 ம் ஆண்டில், ஒன்றிரண்டாக துவங் கிய இந்த மையங்கள், இப்போது வெளிநாடு கள்,வெளி மாநிலங்கள் என உலகம் முழுவதும் 360க்கும் அதிகமாகவுள்ளன.
வெறும் பத்துக்குப் பத்து சதுரடி பரப்பிலான கட்டிடங் களில், ஏதாவது ஒரு பெயரில் இந்த மையத்தைத் துவக்கி, பாரதியார் பல்கலை சான்று தருவதாகக் கூறி, மாணவர்கள் சேர்க் கப் படுகின்றனர். பல்கலை எல்லையைத் தாண்டி நடத்தப்படும் இந்த மையங் களில், எந்த கலை, அறிவியல் கல்லுாரியிலும் நடத்தப் படாத புதுப்புது பட்டப்படிப்புகள் படிக்கலாம் என்று விளம்பரம் தரப்படுகிறது.
பாரதியார் பல்கலையே அனுமதி தர முடியாத மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு படிக்கலாம் என்றும் துணிச்சலோடு இந்த மையங்கள் விளம்பரங்கள் செய்கின்றன. அதற்கான தேர்வையும் நடத்தி, பல்கலை சான்றையும்தருகின்றன. இதுபோன்ற எந்த பட்டப்படிப்புக்கான சான்றும் செல்லாது என்று, பல்கலை மானியக்குழு பகிரங்கமாகவே அறிவித்து விட்டது. ஆனால், இன்று வரையிலும் இந்த மையங்களில் சேரும் மாணவர்களுக்கு, பாரதியார் பல்கலை சான்று, தாராளமயமாக வழங்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது, விடை தாள் திருத்துவது எல்லாமே, சட்ட விரோதமாக நடத்தப்படுகிறது என்று கல்வியாளர்கள் ப