சம்பள உயர்வு தேவையா: எம்.எல்.ஏ.,க்களுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி


மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா என்பது பற்றி எம்.எல்.ஏ.,க்கள்
சிந்திக்க வேண்டும் ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.

மனு:

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் வறட்சியால் விவசாயம் பாதித்துள்ளது. பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம் 55 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சத்து 5000 ரூபாயாக ஜூலை 19 ல் அரசு உயர்த்தியுள்ளது. இதை நிறுத்தி வைக்க தமிழக தலைமைச் செயலர், நிதித்துறை செயலர், சட்டசபை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

தள்ளுபடி:

இந்த மனு சசிதரன், சாமிநாதன் அமர்வு முன்வு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறுகையில், விவசாயிகள் தற்கொலை, கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்நிலையில், சம்பள உயர்வு தேவையா என்பதை எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்குள்ளே கேள்வி எழுப்பி கொள்ள வேண்டும். தமிழக நிதிநிலை குறித்து அரசுதான் தீர்மானிக்க முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...