'மாணவர்களை வெற்றியாளர்களாக மாற்றும்'


தஞ்சை: - ''தமிழக கல்வித் துறையில், உருவாக்கப்படும் புதிய பாடத் திட்டம், ஒவ்வொரு
மாணவரையும் வெற்றியாளராக மாற்றும்,'' என, புதிய பாடத் திட்டக் குழுத் தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

புதிய பாடத் திட்டம் வடிவமைப்பு குழு சார்பில், எட்டு மாவட்டங்களுக்கான கருத்து கேட்கும் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மைய இணை இயக்குனர் பொன்குமார் முன்னிலை வகித்து பேசுகையில், ''தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பின், உருவாக்கப்படும் பாடத்திட்டம் தரமானதாக அமைவது நிச்சயம்,'' என்றார்.

கூட்டத்தில் அனந்த கிருஷ்ணன் பேசியதாவது: மதுரை, கோவை, சென்னையில் இது போன்று கருத்து கேட்கும் கூட்டங்கள் நடந்தன. ஆசிரியர், கல்வியாளர், மக்கள் என ஏராளமானோர் பயனுள்ள ஆலோசனைகள் அளித்தனர். இவற்றை பாடத் திட்ட வடிவமைப்பு குழு ஒருங்கிணைக்கும்.
மாநில பாடத் திட்ட வடிவமைப்பு குழுவின் நோக்கம், 'தற்போது முதல் வகுப்பில் சேரும் மாணவர், பிளஸ் 2 படித்து வெளியேறும் போது, அப்போதைய அரசியல், தொழில் நுட்பம், பொருளாதார மாற்றங்களில் உள்ள சவால்களை சந்திக்கும் வகையில் இருக்க வேண்டும்' என்பது தான்.
புதிய பாடத் திட்டம் வடிவமைப்பதுடன், கல்வி திட்டத்தையும் மாற்றும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கற்பித்தல், தொழில்நுட்பம், கட்டுமான வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களும் சர்வதேச தரத்துடன் பாடத்திட்டத்தில் இடம்பெறும்.
மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில், 'கவுன்சிலிங்' குழுக்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தேர்வுகள், மற்றும் மதிப்பீடுகள் எந்த முறையில் அமைய வேண்டும் என்பதையும் இக்குழு முடிவு செய்யும்.
ஆசிரியர்கள் ஈடுபாட்டை மாணவர்கள் நலனுக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஏற்ப, நவீன தரத்திலான பயிற்சி அளிக்கப்படும். பாடத் திட்டத்தை தாண்டிய விஷயங்கள் பாடநுால்களில் இடம் பெறும். 32 வகை போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்கள் தயார்படுத்தப்படுவர். இதுதொடர்பான வரைவு பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என பல்வேறு கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அளித்தனர்.
நடராஜன், ஆசிரியர், தஞ்சை:
ஆறாம் வகுப்பில் இயற்கை விவசாயம், மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு பாடங்கள் சேர்க்க வேண்டும். காந்தங்கள், சோலார் பயன்பாடு குறித்து கூடுதல் விவரம் இடம்பெற வேண்டும். ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் மனித உறுப்புகள் செயல்பாடு மற்றும் இயக்கம் குறித்து அதிக தகவல் இடம்பெற வேண்டும். பி.இ., பாடத்தில் இடம் பெற்ற சில அடிப்படை பகுதிகளை, பிளஸ் 1ல் இணைக்க வேண்டும்.

அருள்குணசேகரன், ஆசிரியர், தஞ்சை:
பிளஸ் 1ல், 80 சதவீதம் மாணவர்கள் கலை பாடத்தை தான் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக கணக்கு பதிவியலில், மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான சொற்கள் பயன்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி., வருமான வரி, ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான பாடத் திட்டங்கள் அதிகம் சேர்க்க வேண்டும்.
ராஜராஜேஸ்வரி, ஆசிரியை, திருச்சி:
தொடக்க பள்ளிகளில் கலை, கலாசாரம், பண்பாடு தொடர்புடைய பாடங்கள் இடம் பெற வேண்டும். கதை பகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையிலும், புதிர், வினாடி வினா இடம் பெற வேண்டும். நுண்ணறிவு திறன்களை மேம்படுத்தும் பயிற்சி புத்தகங்கள் வழங்க வேண்டும்.

அல்லிராணி, பெற்றோர், திருச்சி:
மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாணவர் உள்ளதை மாற்ற வேண்டும். அவர்கள் சுயசிந்தனையுடனும் சமுதாய நலன் குறித்து சிந்திக்கும், மன அழுத்தம் இல்லாத கல்வி வேண்டும். மகிழ்ச்சியாக படிக்கும் மனநிலைக்கு தயார்படுத்தும் பாடம் அவசியம்.

ரவுலத், மாணவி, திருச்சி:
மாணவர்கள் மீது, அதிக பாடங்களை திணக்க கூடாது. பாடச்சுமைகளை குறைக்கும் பாடத்திட்டம் வேண்டும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகுப்பறையாக இருக்கக் கூடாது. மாணவர்களை அடக்கி ஒடுக்கி புத்தகப் புழுக்களாக மாற்றாமல், பறக்க விட்டு மகிழ்ச்சியான பட்டாம்பூச்சிக்களாக மாற்றும் பாடத் திட்டங்கள் வேண்டும்.

சாமி சத்யமூர்த்தி, தலைமையாசிரியர், புதுக்கோட்டை:
ஐந்தாம் வகுப்பு வரை, மொழி பாடங்களில் பேச்சு எழுத்து பயிற்சி அளித்து கண்காணிக்க வேண்டும். பாடங்களை குறைக்கும் வகையில் புதிய திட்டம் இருக்க வேண்டும். அப்போது தான் கல்வி செயல்பாடு மகிழ்ச்சியானதாக இருக்கும். 120 நாட்களில் முடிக்கும் வகையில் பாடம் இருக்க வேண்டும். ஆசிரியர் பணிமாற்றம் செய்யப்பட்டால், அடுத்த நாளே அந்த இடத்தில் ஆசிரியர் நியமிக்கும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
ஜி.ஆர். பாலகிருஷ்ணன், கல்வியாளர், மதுரை:
பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...