சட்டசபை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான உரிமைக்குழு கூட்டம் இன்று
தலைமை செயலகத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூட்டம் நடந்தது.
கடந்த ஜூலை, 18 ம் தேதி தடையை மீறி நடக்கும் குட்கா விற்பனையை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை அவையில் கொண்டு வந்து காட்டினார். இது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என ஆளும் கட்சி தரப்பில் உரிமைகுழுவில் புகார் செய்யப்பட்டது. இதன்படி இன்று கூடிய குழு கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர் செங்கோட்டையன், கீதா , சரவணன், மருதமுத்து, ராமஜெயலிங்கம், திமுக தரப்பில் ரவிச்சந்திரன், சுந்தர், மதிவாணன், பெரியகருப்பன், ரகுபதி, காங்கிரஸ் கொறடா விஜயதாரணி ஆகியோர் பங்கேற்றனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்டாலினுக்கும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஜக்கையன், ஏழுமலை, தங்கதுரை ஆகிய 3 பேருக்கும், அழைப்பு விடுக்கப்படவில்லை. வீடியோ ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்படும்