முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சசிகலா நியமித்த
தினகரன் நியமனம் செல்லாது என்றால், மேலும் சசிகலாவின் நியமனமான அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் பதவிகள் செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இன்று அதிமுக தலைமை கழகத்தில் நடந்த கூட்டத்தில் தினகரன் நியமனம், அவர் அறிவித்த பதவிகள் செல்லாது என்று இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானத்தில் அமைச்சர்கள் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் சசிகலாவால் பொறுப்புகள் பெற்ற செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோர் கையெழுத்திடவில்லை. இது குறித்து அதிமுக தரப்பில் கேட்டபோது, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சியை வழி நடத்தி செல்கிறோம் என்று கூறியுள்ளோம். இதனால் இவர்கள் கையெழுத்து போடவில்லை.