காவிரி வழக்கில் இறுதி கட்ட வாதம் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில்
இன்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதனைக் கேட்ட பிறகு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்துள்ளது.தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், கர்நாடக அரசு போதிய அளவு தமிழகத்திற்கு தண்ணீர் தராததால் விவசாய நிலங்கள் பெருமளவு குறைந்து விட்டன. காவிரி உற்பத்தியாகிறது என்பதற்காக அதனை கர்நாடக சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்தது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசால் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? காவிரி நடுவர் மன்ற குழுவின் தீர்ப்பை அமல்படுத்த இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டுள்ளது