வினோதமான கைவிரல் : ஒதுக்கும் கிராமம்!!!


இந்தியாவில் 4 கைகளுடன் , கால்களுடன், வாலுடன் எனக் குழந்தைகள் வினோதமாகப் பிறந்தால்
அவர்களுக்கு மருத்துவ முறையில் தீர்வு காணாமல் அவர்களை தெய்வமாக்கி வழிப்படும் சம்பவம் ஒருபுறமும், வினோதமான நோயினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் சாபம் என ஒதுக்குவது மறுபுறமும் நடந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வினோத நோயால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனை அக்கிராமமே ஒதுக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவன் சிறுவன் டாரிக் (12). பிறக்கும் போதே அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு சாதாரணமான மனிதனை விடப் பெரிய கை விரல்களைக் கொண்டுள்ளார். அவரது கைகள் தற்போது 12 அங்குலத்திற்கு நீண்டுள்ளது. சிறு வயதிலிருந்து சிகிச்சைக்காக பல மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்து வந்தார். அவர் தந்தை இறந்தவுடன், குடும்ப சூழ்நிலை காரணமாகச் சிகிச்சையை நிறுத்தியுள்ளார். பெரிய விரல்களால் குளிப்பது, உடை மாற்றுவது மற்றும் சாப்பிடுவது போன்ற தினசரி பணிகளை அவரால் செய்ய முடியவில்லை.அவருடைய தினசரி பணிகளை மேற்கொள்ள அவரின் சகோதரர் ஹர்கியான் உதவுகிறார்.

இது குறித்து டாரிக், ‘என்னுடைய கைகள் சிறு வயது முதல் வளர்ந்து வருகிறது. இப்போது பெரிதாக இருப்பதால், பள்ளிகளில் படிக்க என்னை அனுமதிக்கவில்லை. சக மாணவர்கள் ஒதுக்கிவைக்கின்றனர்.இது எனக்கு வந்த சாபம் என கிராம மக்களும் ஒதுக்கி வைக்கின்றனர். மற்ற குழந்தைகளைப் பார்க்கும்போது எனக்கும் அவர்களைப் போல் விளையாட வேண்டும். படிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் பவன் குமார் காந்த், ‘டாரிக்கின் பிரச்சினை பெரிய மர்மமாகவே உள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் பார்த்ததில்லை. யானைக் கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நிறையப் பார்த்திருக்கிறோம். இன்றைய விஞ்ஞான உலகில் எந்த நோயையும் குணப்படுத்த முடியும். வாய்ப்புகள் குறைவு என்றாலும் நிச்சயம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...