பாக்., அரசு இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்ஸ் இந்திய சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து,
தேசிய கீதத்தையும் ஒலிக்கவிட்டனர்.
பாக்., அரசு இணையதளமான pakistan.gov.pk என்ற இணையதளம் இன்று சிறுது நேரம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. இணையதளம் முடக்கப்பட்டிருந்தபோது இந்திய தேசிய கீதமும், இந்திய சுதந்திரதின வாழ்த்து அடங்கிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.மேலும் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. இணையதளம் முடக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டது.
கடந்த ஏப்., மாதத்தில் டில்லி., ஐ.ஐ.டி., , உ.பி., அலிக்ரா முஸ்லீம் பல்கலை., , டில்லி பல்கலை., பனாரஸ் இந்து பல்கலை., ஆகிய கல்வி நிறுவனங்களில் இணையதளம் முடக்கப்பட்டு ‛‛பாக்.,ஜிந்தபாத்'' என் வாசகம் இடம் பெற்றிருந்தது . இது அதற்கு முன்பு பாக்.,ரயில்வே இணையதளம் முடக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கை என அதை ஹேக் செய்த குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது