இந்திய விடுதலைவிழாச் செய்தி -!!

22/8 ல் அனைவரும் ஒன்றுகூடி உரிமையை பெறுவோம்...

இதுவரை எந்த ஒரு ஆசிரியர்களின்* உரிமை போராட்ட போரில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஓர் பதிவு...

( *யாரையும் புண் படுத்த இல்லை* இந்த பதிவு உங்களையும் *கலந்து கொள்ள தூண்டுவதாகதான்* இந்த பதிவு)


*பாரதியிடம்* சொல்லாதீர்கள் ...
பொந்திலே  வைத்த அக்கினி குஞ்சுகளாக  *நாங்கள் ஒளிந்துகொண்டு  போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை* என்று.. . .

ஆங்கிலேயன் முன்னால் சட்டை அவிழ்த்து முடிஞ்சா சுடுடா என்று நெஞ்சை காட்டிய *ஜீவாவிடம்* சொல்லாதீர்கள்...
*நாங்கள் கோழைகளாக* போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று!

*பாவம் நிமிர்த்திய நெஞ்சை குறுகி மடிவான் . . 😢*

*மனுநீதி சோழனிடம்* சொல்லாதீர்கள்... *நாங்கள் போராடாமல் யாராவது போராடினால் போதும்* என்று....
*பாவம் மறு சக்கரத்தில் அவனும் படுத்து உயிர் விடுவான் 😢*

*வேலுநாச்சியிடம்* சொல்லாதீர்கள்...
*எங்கள் வாழ்வாதார உரிமையை பெற எங்களுக்கு துணிவு இல்லை* என்று.....

 *பாவம் ஏந்திய வாளை உறையில் வைத்துவிட்டு குமுறி அழுவாள் . . 😢*

மாமன்னர் *ஒண்டிவீரனிடம்* சொல்லாதீர்கள்...
 *எங்களுக்கு குடும்ப வேலை நிறைய இருக்கு* அதனால் தான் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று....
 பாவம் சமரசமில்லாமல் *வெள்ளையனை போரிட்டு எதிர்தவன், சாக உச்சிமலை தேடுவான் . . 😢*

*ராச ராசனிடம்* சொல்லாதீர்கள்....
*எங்களுக்கு நிறைய வேலை இருக்கு* அதனால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை என்று....
 பாவம் பெரிய கோயில் *உச்சியிலிருந்து குதித்து மாண்டுபோவான் . . 😢*

*கட்ட பொம்மனிடம்* சொல்லாதீர்கள...
*நாங்கள் எங்களின் உரிமையை பெற போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை* என்று....
பாவம் மீண்டும் *ஒருமுறை தூக்கில் தொங்கிடுவான் . . 😢*
💥💥💥💥💥💥💥💥
*சேதுபதியிடம்* சொல்லாதீர்கள்...
*நாங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை* என்று....
*பாவம் நடுக்கடலில் குதித்து சாவான் . . 😢*

*வ.உ.சி யிடம்* சொல்லாதீர்கள்....
*நாங்கள் கோழையாய் வாழ்கிறோமென்று* அதனால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை என்று....
*பாவம் செக்கை தலையில் போட்டு கொண்டு மடிவான் . .* 😦

உங்கள் *பிள்ளைகளிடம் மனைவியிடமும்* சொல்லுங்கள்.... *எனக்கு நீங்களும், என் வேலைகளும் முக்கியம்*
*அதனால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதநிலைஎன்று.*

*அதனால் கடைசியில்  பாதிக்கப்படுவது  நீங்கள் மட்டுமல்ல, இந்த சமுதாயமும்தான்.*
😭😭😭😭😭😭😭

*தோழர்களே இன்று சுதந்திர தினம்* இந்த நல்ல நாளில் நாம் *அனைவரும் சபதம்* *எடுப்போம்*

*நம் உரிமையை பெற 22.8.2017அன்று அனைவரும்  பணிக்குச் செல்லாமல்  அந்தந்த வட்டாரங்களில்  காலையில் நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஒன்றுகூடி GPF என்னும் கனியை பெறுவோம்...*

இவன்: *ஜாக்டோ-ஜியோ போராட்டக் குழு.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...