பிரிவதாக முடிவு எடுத்த இடத்திலேயே எடப்பாடி அணியுடன் இணைய திட்டம்??

கடந்த பிப்ரவரி 7 ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் சசிக்கு எதிரான முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுத்தார். இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு பன்னீர்செல்வமும், எடப்பாடியும் வருவதால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரிவதாக முடிவு எடுத்த இடத்திலேயே எடப்பாடி
அணியுடன் இணயை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்திற்கு இரவு 7.30 மணிக்கு செல்கின்றனர்.

ஆலோசனை முடிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கின்றனர். மேலும் அதே போல் ஆலோசனை முடிந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கின்றனர். அணிகள் இணைப்புக்கான அறிவிப்பு குறித்து முதல்வர் எடப்பாடியும், பன்னீர்செல்வமும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...