விவசாயிகளுக்காக தனி வழக்கறிஞர்!


உச்ச நீதிமன்றத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக நடந்துவரும்
வழக்கில், கடந்த வாரம், ‘கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டினாலும் பரவாயில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்தால் போதும்’ என்று தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடியதாகத் தகவல்கள் வெளியாயின.

இதுகுறித்து தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழக டெல்டா விவசாயிகள் இதனால் மிகக் கடுமையான அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக திருவாரூர் வந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்துக்கு எதிராக வாதாடிவிட்டு டெல்டாவுக்கு வரும் தமிழக முதல்வரை எதிர்த்து காவிரி உரிமை கூட்டமைப்பு சார்பில் நேற்று திடீரென திருவாரூரில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் காவிரி உரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன் ஆகியோரது ஒருங்கிணைப்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டு கறுப்புக்கொடி காட்டி கைதாயினர்.

நம்மிடம் பேசிய மணியரசன், “உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கர்நாடக அரசுக்காக வாதாடுகிற கொடுமை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தை தமிழக அரசு பிரதிநிதித்துவப் படுத்தவில்லை.

எனவே, இந்த வழக்கில் டெல்டா விவசாயிகள் சார்பில் தனியாக ஒரு வழக்கறிஞரை வைத்து வாதாட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்ப இருக்கிறோம். நமக்கான நீதியை நாமே தேடிக் கொள்வோம்’’ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...