பட்டப்படிப்பை முடிக்கக் காலக்கெடு !!

சென்னை பல்கலைக்கழகம் பட்டப் படிப்பையும், பட்டமேற்படிப்பையும் முடிக்க, படிப்புகாலம்
முடிந்து இரண்டாண்டு காலக்கெடு விதித்துள்ளது.

தற்போதுள்ள, பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, பட்டப் படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பை முடிக்க எந்தவித காலக்கெடும் இல்லை. ஆனால், இனிமேல் அனைத்துப் படிப்பையும் படிப்புக்காலம் முடிந்த
இரண்டாண்டுக்குள் முடிக்க வேண்டும் என விதிமுறையைச் சென்னை பல்கலைக்கழகம் விதித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இரண்டு வருட படிப்புகள் நான்கு ஆண்டுகளிலும், மூன்று ஆண்டு படிப்புகள் ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் கூடுதலாக ஓராண்டு வழங்கப்படும். இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்.


 இனிமேல் மாணவர்கள் தங்கள் படிப்புகளை முடிக்கக் காலவரையற்ற காலத்தை எடுக்க முடியாது. இது சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும். ஒரு மாணவர் முதுகலை படிப்பை முடிக்க 10 ஆண்டுகள் ஆன சம்பவங்களும் நடந்திருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...