கோவை, பாரதியார் பல்கலையின், 'செனட்' உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்
, அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான வாக்காளர் பட்டியலில், பெரும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கோவை, பாரதியார் பல்கலையின் எல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட் டங்கள் ஒவ்வொன்றிலிருந்தும், பட்டதாரிகள் தொகுதியின் சார்பில், 'செனட்' எனப்படும், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், தலா இருவர் தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்வா கும் உறுப்பினரே, சிண்டிகேட் தேர்தலில் ஓட்டளிக்கவும், போட்டியிடவும் முடியும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, 'செனட்' தேர்தல் நடத்தப்படுகிறது.
செப்., 27ல் தேர்தல்
பட்டம் பெற்று, மூன்று ஆண்டுகளுக்குப் பின், பல்கலையில் பதிவு செய்த பட்டதாரிகள்
ஓட்டளிக்கலாம். நடப்பாண்டுக்கான பட்டதாரி தொகுதி, 'செனட்' உறுப்பினர்கள் தேர்தலுக்கான அறிவிக்கை, கடந்த, 7ம் தேதி வெளியிடப்பட்டு, 22ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன; வாபஸ் பெற, 29ம் தேதி கடைசி நாள்.அடுத்த மாதம் 7ம் தேதியிலிருந்து, ஓட்டுச்சீட்டுகள் வினியோகிக்கப் படும். வெளியூரில் இருப்போர், பதிவுத் தபாலில் அனுப்பலாம். அன்று மாலையில், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.பட்டதாரிகள் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில், நடந்துள்ள முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
2,878 பேர்
இந்த பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில் 2,878 பேர்; திருப்பூர் மாவட்டத்தில் 1,792
பேர்; ஈரோடு மாவட்டத்தில் 4,304 பேர்; நீலகிரி யில் 370 பேர் இடம் பெற்றுள்ளனர். இவற்றில், ஒரே பட்டதாரியின் பெயர், வெவ்வேறு முகவரிகளில் இடம் பெற்றிருப் பதாகவும், இவர்கள், தபால் மூலமாகவும், நேரிலும் இரண்டு அல்லது மூன்று ஓட்டுகள் அளிப்ப தற்கு வாய்ப்புஉள்ளதாக புகார் கிளம்பிஉள்ளது.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியலைத் திருத்தம் செய்து, சரி செய்த பின், தேர்தலை நடத்த வேண்டும்என, அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், பல்கலை பதிவாளர் மற்றும் துணைவேந்தரிடம் முறையிட்டனர்.'மற்ற மாவட்டங்களில் தள்ளி வைக்கலாம்; கோவைக்கு தள்ளி வைக்க முடியாது' என, துணைவேந்தர் கூறியதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால், கோவை மாவட்ட வாக்காளர் பட்டியலில், முறைகேடு செய்து, குறிப்பிட்ட நபரை தேர்வு செய்ய முயற்சி நடப்பதாக சந்தேகம்
வலுத்துள்ளது.அங்கே தள்ளிவைப்பு!: அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:வாக்காளர் பட்டியலில், அகர வரிசைப்படி பெயர்கள் இடம் பெறவில்லை; நாங்கள் ஆய்வு செய்தபோது, பல்வேறு நபர்களின் பெயர்கள், இரு முறை அல்லது மூன்று முறை இடம் பெற்று உள்ளன.
குறிப்பாக, கோவை மாவட்ட வாக்காளர் பட்டியலில், இந்த முறைகேடு அதிகமாகவுள்ளது. இதற்காகவே, தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென கோருகி றோம்.தற்போது, 'சிண்டிகேட்' உறுப்பினராக உள்ள சரவணகுமாரின், 'செனட்'பதவிக்காலம், அடுத்த மாதத்துடன் முடிவுஅடைகிறது.
முயற்சி
இத்தேர்தலில் அவர் ஜெயித்தால், மேலும் மூன்று மாதங்கள், 'சிண்டிகேட்'டில் தொடரலாம். திட்ட மிட்டபடி, 'செனட்' தேர்தல் நடத்தப்படா விட்டால், அவர் அந்த பதவி யில் தொடர முடியாது; அவரைக் காப்பாற்ற, துணைவேந்தர் முயற்சிப்ப தாகத் தெரி கிறது. உயர்கல்வித் துறை செயலர் தலையிட்டு, இந்த தேர்தலைத் தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி, தேர்தல் அலுவலரும், பல்கலைப் பதி வாளருமான வனிதாவிடம் கேட்டதற்கு, ''வாக்காளர் பட்டியலில், இரட்டைப் பதிவு இருந்தால், அவை நீக்கப்படுமென, உறுதி கூறியுள்ளோம்.''அதை ஏற்றுக்கொண்டு தான், ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்றனர். இப்போது, தேவையின்றி புகார் செய்கின்றனர்,'' என்றார்.
துணைவேந்தர் கணபதி கூறியதாவது:
பதிவு செய்யும் பட்டதாரிகள், தங்களது பதிவைப் புதுப்பிக்கும் காலத்துக்கு முன்பாகவே, மறுமுறை பதிவு செய்து விடுகின்றனர். மற்றொரு பதிவு இருந்தால், அதை நீக்கிக் கொள்ளலாம் என, அந்தப் படிவத்திலும் உறுதி தருகின்றனர். அதன்படி, அவர் களது பெயர், ஓரிடத்தைத் தவிர, மற்ற இடங்களில் நீக்கப்பட்டு விடும்.
இதற்காக தேர்தலை தள்ளிப் போட வேண்டிய அவசியமில்லை. தேர்தலை தள்ளி வைப்பதற்கு, வேலை நிறுத்தத்தை ஒரு காரணமாக கூறுகின் றனர்; அதற்காக, தேர்தலை தள்ளி வைக்க முடி யாது.பட்டியலில், இரட்டைப் பதிவுகளை நீக்கு வதற் கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்த லுக்கு அறிவிக்கை வெளியிட்ட பின், அதைத் தள்ளி வைப்பது, சாத்தியம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
யாருக்கும் ஆதரவு இல்லை: துணைவேந்தர்
கோவை பாரதியார் பல்கலை, 'சிண்டிகேட்' உறுப்பினர்கள், 18 பேர்களில், சரவணகுமார், காமேஷ், கமலக்கண்ணன் ஆகியோரது பதவிக் காலம்,