CPS என்கிற மோசடி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரை இந்த பேரமைப்பு (JACTTO - GE0) தொடரும் என ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு !!

முக்கிய செய்தி --JACTTO-GEO
அன்புள்ள  ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்!!!

  இந்த பதிவினை அவசியம் அனைவரும் படித்திட வேண்டுகிறேன்.

            1.4.2003 க்கு பிறகு தமிழகத்தில் பணி நியமணம் பெற்ற ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் அனைவரும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் (CPS ) என்கிற மோசடி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்,  இந்த திட்ட(CPS ) த்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்தி , ஓய்வூதியம் வழங்கிட வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி அவரவர் சார்ந்த இயக்கங்கள் மூலமாக 2003 - 2004 முதலே போராடி வந்தோம் ,
அந்த போராட்ட களத்தில் அந்தந்த அமைப்புகளின் மாநில, மாவட்ட , வட்ட நிர்வாகிகளோடு பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்கள் என அனைத்து ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள்  போராடி வந்தோம் , அப்படி போராடியதன் விளைவு  பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்திட *தமிழக அரசால் வல்லுநர் குழு அமைத்ததும்* , இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி  *ஓய்வு பெற்றவர்கள் மற்றும் உயிர் நீத்தவர்களுக்கு கணக்கு முடித்திட ஆணை பெற்றோம்*.

        நண்பர்களே  தற்போது தமிழக அரசின் கீழ் பணிபுரியும் *ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்ந்த அனைத்து இயக்கங்களும் ஜாக் டோ - ஜியோ (JACTTO - GEO ) என்ற மாபெரும் பேரமைப்பை  சுமார் 15 ஆண்டு காலத்திற்கு பின்னர் ஏற்படுத்தியுள்ளார்கள் , அதோடல்லாது CPS என்கிற மோசடி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரை  இந்த பேரமைப்பு (JACTTO  - GE0) தொடரும் என்றும் கூறியுள்ளார்கள் , இத்தருணத்தில் தமிழக அரசிடம் போராடி CPS திட்டத்தின் கீழ் பணியாற்றும் நான்கரை *( 4 .5) லட்சம் பணியாளர்களின் வாழ்வாதார பிரச்சனையாக உள்ள CPS யை ரத்து செய்து பழைய  ஓய்வூதிய திட்டத்தை பெற்றிட வேண்டாமா?*
           ஓய்வூதியம் பெறுபவர்களும் , பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களும்  இந்த போராட்டகளத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தீவிரமாக பணியாற்றும் போது , CPS திட்டத்தில் உள்ள 4.5 லட்சம் ஆசிரியர்களும் , அரசு ஊழியர்களும் தங்களை *100% இணைத்துக் கொண்டு  தன்னெழுச்சியாக செயல்பட்டால் மெரினா புரட்சி போல் அமைந்து CPS ரத்தாகும் அல்லவா ?*
      *தொலைவை காரணம் காட்டி  ஓய்வூதியத்தை தொலைத்து விடாதே!  பெருந்திரளாக திரண்டு வாருங்கள்* .
         ஆண் , பெண் என பாலின பாகுபாடில்லாமல்

*4.5 லட்சம் ஆசிரியர்களும் - அரசு ஊழியர்களும்  சென்னையில் 5.8.17 அன்று  நடைபெறவுள்ள  கோட்டை நோக்கிய கோரிக்கை பேரணியில்  கலந்து கொண்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட செய்வோம்.*
     
    *CPS யை ரத்து செய்வோம்*

       *ஓய்வூதியம் பெறுவோம்!!!*

இப்போராட்டம் வெற்றி பெற வேண்டியது  ஒவ்வொரு தனிப்பட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களாகிய நம் கையில் உள்ளது என்பதனை மறவாதீர்கள்!!!

ஆகவே *ஒன்று பட்டால் உண்டு வாழ்வு* என்ற சொல்லை மெய்பிக்க இது ஒர் அரிய வாய்ப்பாக எண்ணி ஒன்றுபடுவோம்! போராடுவோம்! இறுதியாக​ வெற்றி பெறுவோம்!!!!

*Please must forward atleast 10 members*

   👍👍👍👍👍👍👍👍

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...