ரூ.1 கோடி சொத்து வாங்கியது யார் 500 பேருக்கு ஐ.டி., 'நோட்டீஸ்


தமிழகத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக, நில பரிவர்த்தனை செய்த, 500க்கும் மேற்பட்
டோருக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்த பின், ஜனவரி இறுதியில், 'ஆப்பரேஷன் கிளீன் மணி' என்ற பெயரில், கணக்கில் வராத பணத்தை கண்டு பிடிக்கும் முயற்சியை, வருமான வரித் துறை துவக்கியது.

500 - 1,000 ரூபாய் நோட்டு கள் தடை செய்யப் பட்ட பின், வங்கிகளில், 'டிபாசிட்' செய்த, 14
லட்சம் பேர் மீது, வருமான வரித்துறைக்கு சந்தே கம் ஏற்பட்டது. அவர்கள், அதற்கு முந்தைய ஆண்டு களில் தாக்கல் செய்த, வருமான வரி கணக்கில் குறிப்பிட்டிருந்ததை விட,வங்கியில் டிபாசிட் செய்த தொகை,மிக அதிகமாக இருந்தது. அவர்களில், 9 லட்சத்திற்கும் மேற்பட்ட, வாடிக்கை யாளர்களிடம் விளக்கம் கேட்டு, வருமான வரி துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

இதேபோல், பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கள் சார்பில் வருமான வரித்துறையிடம், சமீபத்தில் நடந்த சொத்து பரிவர்த்தனை குறித்த தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், சிலரது பரிவர்த்த னைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் களுக்கும், வருமான வரித்துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து, தமிழகவருமான வரித்துறை அதிகாரி கள் கூறியதாவது: அதிக மதிப்புடைய சொத்துக்கள் வாங்கியவர்கள் மற்றும் விற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. சொத்துக்களை வாங்கியவர்கள், வருமான வரிக் கணக்கில், அதற்கான வருவாயை காட்டவில்லை. பலரது வருமான வரிக் கணக்கை
ஆய்வு செய்ததில், நிறைய வேறுபாடு இருப்பது தெரிய வந்தது. மேலும், ஒரு கோடி ரூபாய் மற் றும் அதற்கு அதிகமான தொகைக்கு, சொத்துப் பரிவர்த்தனை செய்த பலர், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாததும் தெரிய வந்துள் ளது.

அதுபோன்ற, 500க்கும் மேற்பட்டவர் களுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ் ' அனுப் பியுள் ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...