ஆயிரம் ஆண்டில் இல்லாத புயல்: ரூ.10 லட்சம் கோடி இழப்பு!!


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கிய புயலால், இதுவரை இல்லாத வகையில்,
10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது; 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில், 'ஹார்வி' புயல் சமீபத்தில், கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், 127 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது.
இதனால், பல லட்சம் பேர், மின் இணைப்பு, குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டனர்; ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். புயல், மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பத்திரிகையான, 'நியூயார்க் டைம்ஸ்' கூறியுள்ளதாவது: அமெரிக்க வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், மிக மோசமான பாதிப்புகளை, ஹார்வி புயல் ஏற்படுத்தியுள்ளது; பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக, 38 பேர் உயிரிழந்துள்ளனர்; 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால், 32 ஆயிரம் பேர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளால், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல நாள் பாதிப்புக்கு பின், நிலைமை சற்று சீரடைந்து வருகிறது. எனினும், பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு, இயல்பு வாழ்க்கை திரும்ப, பல நாட்கள் ஆகலாம்.இவ்வாறு அந்த பத்திரிகை கூறியுள்ளது.

ஒரு லட்சம் இந்தியர்கள் : அமெரிக்காவில் 'ஹார்வி' புயல் தாக்கிய டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இந்த புயலில், அவர்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடு இழந்து தவிக்கும் இந்திய வம்சாவளியினர், இங்குள்ள கோவில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கொடுத்து உதவி வருகின்றனர். தன்னார்வ குழுக்கள் அமைத்து, மீட்பு பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த புயலில், இந்திய மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

நிதி திரட்டுகின்றனர் : அமெரிக்காவில், புயலில் சிக்கி பாதிக்கப்பட்ட, இந்திய வம்சாவளியினருக்கு உதவுவதற்காக, இங்குள்ள இந்தியர்கள் நிதி திரட்டி வருகின்றனர். இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் வசிக்கும், இந்திய வம்சாவளியினர், நிதி உதவி அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...