ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளர் நிலையில் பணிபுரியும்
உங்கள் தோழன்
*அ.இராஜா*
ஆகிய என்னில் இருந்து
21/09/2017 அன்று என்ன நடக்கும்னு
ஒரு சிறிய கற்பனை
*இடம்:உயர்நீதி மன்றம்*
*பங்கேற்பவர்கள்:*
தலைமை நீதிபதி,
அரசு தலைமை செயலர்,
அரசு வழக்கறிஞர்,
எதிர் தரப்பு வழக்கறிஞர் ,
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்.
*நீதிபதி:*
தலைமை செயலரை அழைக்கவும் .
*தலைமை செயலர்:*
நீதிபதி அய்யா அவர்களுக்கு வணக்கம்.
*நீதிபதி:*
ஆசிரியர்கள்
அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு
மூன்று கோரிக்கைகளை
முன் வைத்து
போராடினார்களே
அதற்கு அரசின் பதில் என்ன.
*தலைமை செயலர்:*
*கோரிக்கை 1 க்கான பதில்:* மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்
தமிழ்நாடு மாநில அரசு
பிப்ரவரி 2017 ல்
8வது ஊதியக்குழு அமைத்துள்ளது.
ஜூன் 2017 இறுதிக்குள்
பரிந்துரைகள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது.
பணிகள் நிறைவடையாததால் குழுவின் காலம் மேலும் மூன்று மாதங்கள்
(செப்டம்பர் 2017 இறுதி வரை)
நீட்டிக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகள் இன்றி
எந்த முடிவும் எடுக்க இயலாது மைலார்ட்...
*கோரிக்கை 2 க்கான பதில்:*
குழுவின் பரிந்துரை வரப்பெறும் வரை
இடைக்கால நிவாரணமாக 20% கோருகிறார்கள்.
அரசு தற்போது உள்ள கடன்சுமையில்
இடைக்கால நிவாரணம் அதுவும் 20% என்பது சாத்தியம் இல்லாத முடிவு...
எனவே அரசு அந்த முடிவை கைவிடுகிறது மைலார்ட்...
*கோரிக்கை 3 க்கான பதில்:*
அரசு நிர்வாகத்தை நடத்திட ஆகும் செலவைவிட ஓய்வூதியத்திற்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கிறது.
எனவே 2003 ம்ஆண்டிலேயே அரசின் கடன்சுமையை கருத்தில் கொண்டும்
பெருகிவரும் ஓய்வூதியதாரர்களை
கருத்தில் கொண்டும்
தமிழக அரசின் நலன் கருதியும்
மத்திய அரசு அப்போது அறிவித்த
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை (CPS) நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அமல்படுத்தி
01 ஏப்ரல் 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களையும் CPS க்கு மாற்றம் செய்தாகிவிட்டது.
ஊழியர்களுக்கு மாதா மாதம் அவர்கள் ஊதியத்தில் ( Pay+ GP+DA) பிடித்தம் செய்யும் 10% தொகையுடன் அரசின் பங்காக அதே10% தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டிற்கு ஒருமுறை இந்த கூட்டுத்தொகைக்கு மத்திய அரசு அறிவிக்கும் விகிதத்தில் வட்டியும் வழங்கப்பட்டு கணக்கில் சேர்க்கப்படுகிறது.
பணியாளர்கள் தங்கள் CPS கணக்கில் உள்ள தொகையை அறிந்து கொள்ள ஏதுவாக ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் CPS Account Statement ம் மாநில கணக்காயர் அவர்களால் வெளியிடப்படுகிறது.
இருப்பினும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு மதிப்பளித்து கடந்த ஆண்டு
26 பிப்ரவரி 2016 ல் ஓய்வு பெற்ற இ.ஆ.ப அலுவலர் திருமதி.சாந்தா ஷீலா நாயர் தலைமையில் CPS ஐ மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு 4 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது.
பணிகள் முடிவடையாத நிலையில் ஆகஸ்ட் 2016 ல் அந்த குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்து.
இதனிடையே குழு தலைவர் தனது பணியை இராஜினாமா செய்துவிட்டமையால் எவ்வித அறிக்கையும் பெறப்படவில்லை.
எனவே தற்போது திரு.ஸ்ரீதர் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது 2017 நவம்பர் இறுதிக்குள் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மைலார்ட்...
*நீதிபதி:*
எதிர்தரப்பு வழக்கறிஞர் தங்களது வாதங்களை முன் வைக்கலாம்.
*நமது வழக்கறிஞர்:*
நீதிபதி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்
தலைமை செயலர் அவர்களின் பதிலை கவனிக்கும்பொழுது..
ஊதியக்குழு என்பது இந்த அரசுக்கு தெரியாமல், எதிர்பாராத சமயத்தில் திடீரென்று ஏற்பட்ட ஒன்று போலவும் இதை அமல்படுத்த முற்பட்டால் இந்த அரசு நிதியில்லாமல் முடங்கிவிடும் என்பது போல சித்தரிக்கப்படுவது நன்றாக தெரிகிறது.
ஆனால் ,
உண்மை அதுவன்று
ஊதியக்குழு என்பது மாறிவரும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட கால இடைவெளியில்
(Probably 10 Years)
அரசு ஊழியர்களின்
ஊதிய அமைப்பில்
(Pay Structure) மாற்றத்தை கொண்டுவந்து அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க 1947 முதல் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வரும் அமைப்பு.
மாநில அரசால் மிகுந்த பொருட்செலவில் இதுபோன்ற ஊதியக்குழுக்களை ஏற்ப்படுத்த முடியாது என்பதால் மத்திய அரசு அமைத்த ஊதியக்குழுவின் பரிந்துரைகளை பெற்று தங்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு அதனை அமல்படுத்திவருகின்றன.
இதுவரை மத்திய அரசு 7 ஊதியக்குழுவினை அமைத்துள்ளது
அதன் விபரங்களை தங்களுக்கு கீழ்கண்டவாறு சமர்ப்பிக்கின்றேன்
யுவர் ஹானர்
ஊதியக்குழு/வருடம்/ஊதியம்
1- 1947 ₹.55-2000
2-1957 ₹.80-3000 (1.545)
3-1973 ₹.196-3500 (2.30)
4-1983 ₹.750-8000 (3.82)
5-1994 ₹.2550-26000 (3.4)
6-2006 ₹.7000-80000 (2.74)
7-2016
₹.18000-250000
(2.57)
கடைசியாக மத்திய அரசு
04 பிப்ரவரி 2014 ல்
7வது ஊதியக்குழு அமைத்தது.
29 ஜீன் 2016 ல் அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுகொண்டு
01 ஜனவரி 2016 முதல்
முன் தேதியிட்டு அதற்கான பணப்பலன்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது
ஊதியக்குழு என்பது திடீரென்று ஏற்ப்பட்டது அல்ல எனவும்
சரியான திட்டமிடுதல் இருந்திருந்தால் மத்திய அரசு அமல்படுத்திய மூன்றே மாதங்களில் மாநில அரசும் இதை தன் ஊழியருக்கு அமல்படுத்தியிருக்க முடியும் என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன் யுவர் ஹானர்...
ஆனால் எனது கட்சிக்காரர்களாகிய ஆசிரியர் அரசு ஊழியர்கள் இரவு பகல் பாராமல் , விடுமுறைகள் கோராமல், சொந்த பந்தங்களையும் மறந்து அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தருவது ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு கண்துஞ்சாமல் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு சில ஆசிரியர்கள் அதையும் தாண்டி தான் பெற்ற ஊதியத்தைக்கூட தனக்கும் குடும்பத்திற்கும் செலவழிக்காமல்
தனியார் பள்ளியில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும்
தன் சொந்த செலவில்
தன் வகுப்பு மாணவர்களுக்கும் கிடைக்க செய்து மகிழ்கிறார்கள்.
ஆனால் இந்த அரசு
எனது கட்சிக்காரர்களின் உழைப்பை துச்சமாக எண்ணுகின்றது.
எனவேதான்
ஊதியக்குழு அமல்படுத்த விருப்பம் இல்லாமல்
கடமைக்கு ஒரு குழுவை அமைத்து
வேண்டும் என்றே அதை காலம் தாழ்த்தி வருகிறது இந்த அரசு என்பது எனது அடிப்படை குற்றச்சாட்டு யுவர் ஹானர்.
இன்று நிதி நிலைமை சரியில்லை என்று கூறும் அரசிடம் கேட்கின்றேன்.....
நிதி நிலைமையை சரி செய்ய வேண்டியது யாருடைய பொறுப்பு?
தேவையில்லாத திட்டங்களையும் , இலவசங்களையும் வழங்கி கஜானாவை காலி செய்தது யாருடைய குற்றம்?
அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்ப
வருமானத்தினை பெருக்க இந்த அரசு எத்தனை திட்டங்களை வகுத்துள்ளது? செயல்படுத்தியுள்ளது?
கடனில் மூழ்கியுள்ள இந்த மாநிலத்தை மீட்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?
இதையெல்லாம் நான் இங்கு கேட்க காரணம்
இவைகளில் எதிலுமே தொடர்பில்லாத என் கட்சிக்காரர்கள் இவற்றால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதால் தான்.
நமது மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA)தங்களது ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்திய போது எந்த குழு அமைத்தார்கள் என்பதனையும் எத்தனை மாதம் பரசீலித்தார்கள் என்பதனையும் அப்பொழுதெல்லாம் நிதி நிலைமை சீரும் சிறப்புமாக இருந்ததா என்பதனையும் கணம் கோர்ட்டார் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
TNPSC, TET, TRB இன்னும் பிற அரசுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று மக்கள் பணி செய்ய வந்ததை தவிர என் கட்சிக்காரர்கள் செய்த தவறு என்ன ?
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற ஒன்றை பரிந்துரைத்த மத்திய அரசு அதை
01 ஜனவரி 2004 ல் தான் அமலுக்கு கொண்டு வந்தது....
அன்று இந்த மாநில அரசு என்ன செய்தது தெரியுமா! யுவர் ஹானர்!
01 ஏப்ரல் 2003 லேயே அதாவது ஒன்பது மாதங்களுக்கு முன்பே மத்திய அரசை முந்திக்கொண்டு CPS ஐ தமிழகத்தில் அமல்படுத்தியது..
ஆனால் இன்று அதே மத்திய அரசு 01 ஜனவரி 2016 முதல் அமல்படுத்திய ஊதியக்குழுவினை
இன்னமும் அமல்படுத்தாமல்
ஒரு வருடம் ஒன்பது மாதங்கள் கடந்தும் காலம் தாழ்த்துவதில் இருந்தே இந்த அரசு
ஊழியர் விரோத போக்குடன் செயல்படுவது தெளிவாக தெரிகிறது....
மொத்த மக்கள் தொகையில் வெறும் 2% உள்ள ஊழியர்களுக்கே ஊதியம் வழங்க இவர்களால் முடியவில்லை ....
ஆனால் இந்த 2% ஊழியர்கள் மீதமுள்ள 98 % மக்களுக்கும் தங்களை வருத்தி பணிசெய்து கொண்டிருக்கின்றனர்.......
எனவே சமூக நீதியை காக்க வேண்டி எனது கட்சிக்காரர்களுக்கு 7 வது ஊதியக்குழுவை மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்ததை போலவே 01.01.2016 முதல் முன்தேதியிட்டு வழங்கிட இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
*நீதிபதி:*
குறிப்பு எடுத்துக் கொள்கிறார். (பிறகு)
வாதம் முடிந்ததா?
*நமது வழக்கறிஞர்:*
எனது கட்சிக்காரர்களின்
3 வது கோரிக்கை குறித்து
வாதத்தை தங்கள் முன் வைக்கவேண்டும் யுவர் ஹானர்.
*நீதிபதி:*Yes Proceed.
*நமது வழக்கறிஞர்:*
யுவர் ஹானர்,
பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் (Contributory Pension Scheme) என்பது அரசின் ஏமாற்றும் வேலை.
அப்படி ஒரு திட்டமே கிடையாது
பங்களிப்பு அளித்த பின்னர் அது எவ்வாறு ஓய்வூதியம் ஆகும் யுவர் ஹானர்!
*நீதிபதி:*
நீங்கள் கூறுவது புரியவில்லை.
*நமது வழக்கறிஞர்:*
அரசு தலைமை செயலரிடம் நான் சில கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதித்தால் இது அனைவருக்குமே புரிய வரும் யுவர் ஹானர்.
*நீதிபதி: Yes Proceed*
*நமது வழக்கறிஞர் தலைமை செயலரிடம்:*
இப்பொழுது மாதம் மாதம் உங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு அரசு உங்களிடம் பங்களிப்பு பெறுகிறதா?
*தலைமைசெயலர்:*
என்ன பேசுகிறீர்கள்?
எனக்கு ஊதியம் வழங்க என்னிடமே எப்படி பங்களிப்பு பெற முடியும்.
*வழக்கறிஞர்:*
பெறுகிறதா? இல்லையா?
*தலைமை செயலர்:*
இல்லை.
*நமது வழக்கறிஞர்:*
ஆக, ஊதியம் வழங்க பங்களிப்பு பெற முடியாது.
*தலைமை செயலர்:*
ஆம்.
*நமதுவழக்கறிஞர்:*
நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்
(நீதிபதி குறிப்பு எடுக்கிறார்)
*நமது வழக்கறிஞர் தலைமை செயலரிடம்:*
ஓய்வு + ஊதியம் என்பதுதான் ஓய்வூதியம் என்பதை தாங்கள் ஒப்பபுக்கொள்கிறீர்களா
*தலைமை செயலர்:*
ஆம்,ஒப்புக்கொள்கிறேன்
*நமது வழக்கறிஞர்:*
உங்கள் ஊதியத்திற்கு நீங்கள் பங்களிப்பு அளிக்க தேவையில்லை என்றீர்கள்
அவ்வாறு இருக்கும் போது
ஓய்விற்கு பின் நீங்கள் பெறப்போகும் ஊதியத்திற்கு
உங்களிடம் பங்களிப்பு பெற்றால் அது எவ்வாறு ஓய்வூதியம் ஆகும் ....
*தலைமை செயலர்:*
ஆஆஆஆஆ????
*நமதுவழக்கறிஞர்:*
இன்னும் விளக்கமாக கூறுகிறேன்.
ஓய்வூதியம் என்பது ஒரு நபர் தன்னால் உழைக்க முடிந்த காலத்தில்
அரசுக்கு/நிறுவனத்திற்கு
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கோ அதற்குமேலோ செய்த ஊழியத்திற்காக
அந்த நபரால் இனி உழைக்க முடியாது என தெரிந்து அவரை ஓய்வுபெற செய்து வீட்டிற்கு அனுப்பிய பின்னர்
அவர் ஊழியம் செய்த பணி/ பதவி மற்றும் காலத்தை பொறுத்து கணக்கீடு செய்யப்பட்ட , நிலையான தொகையினை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவருடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வழங்கப்படுவது...
அது மாறுகின்ற அல்லது வளர்ச்சி அடைகின்ற பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு
ஒரு சீரான இடைவெளியில் அதற்க்கு ஏற்றார்போல் அதிகரிக்கப்படுவது.
ஓய்வூதியத்தில் பங்களிப்பு என்ற வார்த்தைக்கு வேலையே இல்லை.
நீங்கள் இங்கு செய்து கொண்டிருப்பது
Defined Contributory Plan
அதாவது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டம்.
இது ஓய்வூதிய திட்டம் கிடையாது.
இதில் ஓய்வூதியமும் கிடைக்காது.
மாறாக மாத ஊதியத்தில் ஊழியரிடம் பிடித்தம் செய்த தொகையும் அதற்கு ஈடான நிறுவனத்தின் தொகையும்
ஊழியரின் Defined Contributory திட்ட கணக்கில் வரவு வைக்கப்பட்டு கொண்டே வரும்.
தனியர் ஓய்வு பெறும் காலத்தில் அந்த தொகை அவருக்கு முழுமையாக வழங்கப்படும்.
சாதாரணமாக அது
12% + 12% = 24% என்ற அளவில் இருக்கும்.
இது வருங்கால வைப்பு நிதி போன்றது.
இதைத்தான் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் என்று கூறி ஊழியர்களை இந்த அரசு ஏமாற்றி வருகிறது.
அதிலும் 10% மட்டும் அளித்து 2% ஏப்பம் விட்டது.
இதற்கு பிறகு நடந்தவைகள் இதைவிட மோசம்
இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட மற்றும் நிர்வாக பங்குத்தொகைகள்
PFRDA (Pension Fund Regulatory & Development Authority)
என்று சொல்லக்கூடிய மத்திய நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
2003 ல் நாட்டிற்கே முன்னோடியாக திட்டத்தை ஆரம்பித்தவர்கள்
14 ஆண்டுகள் ஆகியும்
இன்று வரை ஒரு பைசாவை கூட PFRDA வில் செலுத்தவில்லை என்பதை தங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன் யுவர் ஹானர்.
எனவேதான் இந்த திட்டம் வேண்டாம் என்று எனது கட்சிக்காரர்கள் இன்றளவும் போராடி வருகிறார்கள்.
ஆனால் இந்த அரசு CPS இரத்து குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து முடிவு எட்டப்படும் என்று கூறி இன்று வரை குழு அமைத்து கழைத்து அமைத்து கழைத்து எனது கட்சிக்காரர்களின் வாழ்வில் விளையாண்டு கொண்டிருக்கிறதே ஒழிய முடிவை எட்டியபாடு இல்லை யுவர் ஹானர்.....
இதற்க்கும் நல்ல தீர்ப்பினை அளித்து
ஆசிரியர் அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிடுமாறு கூறி எனது வாதத்தை நிறைவு செய்கிறேன்
நன்றி யுவர் ஆனர்
🙏🙏🙏🙏🙏
*அ.இராஜா*
கணக்கர்(பொது)
*ஊராட்சி ஒன்றியம்*
*சின்னசேலம்.