ஓசூர், தளி அரசு மாதிரிபள்ளிக்கு செல்ல, சாலை வசதி இல்லாததால், பஸ் வசதி இன்றி, இரண்டு கிலோ மீட்டருக்கு, மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் நடந்து செல்லும் பரிதாப நிலை தொடர்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'லிட்டில் இங்கிலாந்து' என்றழைக்கப்படும் தளியில், 2013 ஜூன் மாதம், அரசு மாதிரி பள்ளி துவக்கப்பட்டது.
சொந்த கட்டட வசதி இல்லாததால், தளி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாதிரி பள்ளி இயங்கி வந்தது. தளி பகுதியின் ஒதுக்குப்புறத்தில், மாதிரி பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டு, 2016 ஜூலை, 18ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த பள்ளிக்கு சாலை வசதி இல்லாததால், அரசு பஸ்களை கூட இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இதனால், மாதிரி பள்ளியில் படித்து வரும், தளி உட்பட, பல்வேறு மலை கிராம மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், தளி பஸ் ஸ்டாண்டில் இறங்கி, இரண்டு கிலோ மீட்டர் நடந்து, பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது.
கரடு, முரடான மண் சாலை, மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுவதால், மாணவ - மாணவியர் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
காடு போல் உள்ளதால் வயது வந்த பெண் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்
தயங்குகின்றனர்.
இப்படி பல சிரமங்களுக்கு இடையே, மாணவ - மாணவியர் நடந்து சென்று கல்வி கற்று வரும் நிலையில், 6 - 10ம் வகுப்பு வரை, அதிகளவு மாணவ - மாணவியர் உள்ளதால், இரு வகுப்புகளாக பிரிக்கப்பட்டு, பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
மாதிரி பள்ளியில், பட்டதாரி ஆசிரியர்கள், ஆறு பேர், முதுகலை ஆசிரியர்கள், ஏழு பேர் என, மொத்தம், 13 பேர் மட்டுமே உள்ளனர்.போதிய ஆசிரியர்கள் இல்லை. அத்துடன், அலுவலக உதவியாளர், துப்புர வாளர், கிளர்க் என, எந்த பணியிடமும் நிரப்பப்படாமல் உள்ளது.
கடந்த, 2013ல், 55 மாணவர்களுடன் துவங்கப்பட்ட மாதிரி பள்ளியில், ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தற்போது, 442 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
10ம் வகுப்பில், ஆண்டுதோறும், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் இப்பள்ளியை, மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித் துறை கண்டுகொள்ளாமல்
உள்ளது.