சித்த மருத்துவம் படிக்க 7,000 பேர் விண்ணப்பம்


இந்திய முறை மருத்துவ படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில்
, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகள், ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ளன.

இவற்றில், 396 இடங்களும், 22 சுயநிதி கல்லுாரிகளில், 859 இடங்களும், அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பு வினியோகம், ஆகஸ்ட், 2ல் துவங்கியது.

சித்த மருத்துவ கல்லுாரிகளில் விண்ணப்பங்களை பெற, பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் குவிந்தனர். தமிழக மாணவர்கள் மட்டுமல்லாமல், கேரளா போன்ற பக்கத்து மாநில மாணவர்களும், சென்னை மற்றும் கன்னியாகுமரி மருத்துவ கல்லுாரிகளில் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
இதில், சித்த மருத்துவ கல்லுாரிகளில், 5,518 பேர், இணையதளத்தில், 1,420 பேர் என, மொத்தம், 6,938 பேர், இந்திய முறை மருத்துவ படிப்புகளில் சேர, விண்ணப்பித்து உள்ளனர். இதற்கான, தரவரிசை பட்டியல் வெளியீடு மற்றும் கவுன்சிலிங், அக்டோபரில் நடைபெறும் என, இந்திய முறை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...