சேலம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு மாணவர்களை அழைத்து வரவேண்டாம்: முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!


மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவிற்கு மாணவர்களை அழைத்து வரவேண்டாம்
என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றத்தில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்; மாணவர்களை எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவிற்கு அழைத்து வரக்கூடாது. பரிசு பெறக்கூடிய மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் செல்லலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல கூடாது என சேலம் முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...