வரி வசூலை மேம்படுத்த நடவடிக்கை!


வருமான வரித்துறை வரி தன் வளையத்தை விரிவாக்கம்
செய்வதிலும், ஆன்லைன் வரி மதிப்பீட்டு முறையை மேம்படுத்துவதிலும் அதிகம் கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2ஆம் தேதி, டெல்லியில் மத்திய மாநில வரி அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில், “பெரிய தகவல் பகுப்பாய்வுகளின் மூலம் நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி வசூல் இலக்கை விட அதிகமாக வசூல் செய்ய நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நடப்பு நிதியாண்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் திட்டமிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு பிறகு சேகரிக்கப்பட்ட தகவல்களை சரிபார்ப்பது, வரி வளையத்தை விரிவாக்கம் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வருவாய்த் துறை செயலாளரான ஹஸ்முக் அதியா பெசுகையில், “வருவாய் என்பது குறுக்குத் துறை விவகாரம். இதற்கு நேரடி வரிகளுக்கான மத்திய வாரியமும், மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியமும் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். இரு வாரியத்தின் அதிகாரிகளும் கூட்டுப்பணியாற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...