கல்வி உதவித்தொகை காலக்கெடு மீன்டும் நீட்டிப்பு !!

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் நேற்று (செப்டம்பர் 29) அறிவித்துள்ளது.

மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1, பிளஸ் 2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவை படிக்கும் கிறிஸ்தவர்,
முஸ்லிம், சீக்கியர், ஜெயின் மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது.

இந்த உதவித்தொகையைப் பெறக் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

மாணவர்களின் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி செப்டம்பர் 30ல் இருந்து அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.scholarships.gov.in என்னும் இணையதளத்தில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...