காரியாபட்டி: சாதித்தவர்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருப்பார்கள்
. ஆகையால் அதில் சாதிக்க வேண்டும் என்ற வெறி மனசுக்குள் மத்தாப்பாய் வெடித்திருக்கும். மனதிற்குள் வெறி வந்தால் மட்டும் வெற்றி எளிதில் எட்டிவிடாது.
கடுமையான உழைப்பு, போராட்டம் என அதில் தன்னை அர்ப்பணித்தவர்கள் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகின்றனர். அதிலும் இளவயதில் ஏற்படுகிற தாக்கத்திற்கு வேகம் அதிகம் இருக்கும். அந்த அடிப்படையில் சிறு வயதில் தெருக்களில் விளையாடிய சதுரங்க விளையாட்டில் தன்னை சேர்க்கவில்லை என்கிற ஆதங்கம் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்த முறை விளையாடும் போது சேர்த்துக் கொண்டாலும் பல்வேறு தோல்விகளை சந்தித்ததால் உருவான வெறி, இன்று பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரனாக வலம் வருகிறார் 10 ம் வகுப்பு மாணவனான காரியாபட்டி ஆதிமுனீஸ்வரன்,
பெங்களூருவில் தேசிய அளவில் நடந்த, சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று,
முதலிடத்தை பிடித்து முதல்வர் பாராட்டு சான்றிதழ் வாங்கியிருக்கிறார் என்றால் சிறு வயதில் ஏற்பட்ட தோல்வியால் ஏற்பட்ட வெறி சாதிக்க துாண்டிள்ளது. இன்னும் பல்வேறு விருதுகளை தன்வசப்படுத்த வேண்டும் என்கிற வேகம் அவரிடத்தில் காணப்படுகிறது.
பாக்கியமாக கருதுகிறேன்
ஆதிமுனீஸ்வரன் கூறுகையில்,''நான் சிறு வயதில் தெருக்களில் விளையாடும் சதுரங்க விளையாட்டை பார்த்து, அதில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என்னை விளையாட்டிற்கு சேர்க்க மாட்டார்கள். சேர்த்த பின் பல தோல்விகளை சந்தித்த போது என்னை பலர் ஏளமான பேசியது என் மனதிற்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனது ஆர்வத்தை பார்த்து, ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் அளித்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள உதவினர். உள்ளூர், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் உயர்ந்ததற்கு காரணம் எப்படியாவது இதில் சாதிக்கவேண்டும், ஏளனமாக சிரித்தவர்கள் வியக்க வேண்டும் என எனக்குள் ஏற்பட்ட வெறிதான். எனது தந்தை கூலி வேலை பார்ப்பதால் உரிய பயிற்சி எடுக்க வசதி இல்லை. இருந்தாலும் அதில் உள்ள நுணுக்கங்களை நானாக கற்று தெரிந்து வருகிறேன். தேசிய அளவில் எனக்கு கிடைத்த விருதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இன்னும் பல விருதுகள் வாங்க பாடுபட்டு வருகிறேன். ஜனாதிபதியிடம் விருது வாங்குவதே எனது லட்சியமாகக் கொண்டுள்ளேன்,'' என்றான்.
இவரை பாராட்ட, 89406 9144