தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று (செப்.,18) சென்னை
வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென மும்பையில் இருந்து டில்லி புறப்பட்டுச் சென்றார்.
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சரை கவர்னர் சந்தித்து பேசினார். தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழல் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படதாக கூறப்படுகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை அதிரடியாக தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தமிழக அரசியல் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் கவர்னர் ஆலோசித்து உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுறது.