மிகச்சிறந்த போராட்ட களத்தில் இணைந்து களமாடிய உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்...!!

*அன்பார்ந்த தோழர்களே!*

மிகச்சிறந்த போராட்ட களத்தில் இணைந்து களமாடிய உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்...

இந்த போராட்டம் 1904 ஆம் ஆண்டு யூஜின் விடெப்ஸ் என்ற தொழிலாளி *THE METAL WORKAR* பத்திரிக்கையில் எழுதப்பட்ட கவிதையினை உண்மை என மீண்டும் நிரூபித்திருக்கிறது...

*நீதிமன்றம் கேள்வி கனைகளை தொடுத்திருக்கிறது...*

*பத்திரிக்கைகளால் வசைபாடப்பட்டிருக்கிறது...*

*பொது மக்களில் சிலரின் புருவ நெரிப்பும் கூட போர் தொடுத்திருக்கிறது...*


*அரசியல்வாதிகளால் ஏய்க்கப்பட்டிருக்கிறது...*

*ஓடுகாலிகளால் மறுப்புறை கூறப்படுகிறது...*

*துரோகிகளால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது...*

*ஆனால் இதன் வெற்றி சர்வ நிச்சயமே!* என்ற *யூஜின் விடெப்ஸ்*  வரிகள் உண்மையாகும் நாள் தொலைவில் இல்லை.

எதோ எதையும் பெறாமல் வெறும் ஊதிய இழப்போடு திரும்பியதாக சிலரின் மனக்குமுறல்களை கேட்க முடிகிறது...

இந்த போராட்டம் கூட்டு போராட்டத்தில் இளம் தலைமுறைக்கு ஒரு வலிமையான அனுபவத்தினை வழங்கி இருக்கிறது...

துரோகிகளை அடையாளம் காட்டி இருக்கிறது...

போராடும் அமைப்புகளுக்கு அழிவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது...

பல போராடாத அமைப்புகளை, போராட்ட சுழலுக்குள் இழுத்து வந்தது இந்த போராட்டம்...

துரோக தலைமையினை தூக்கி எறிந்துவிட்டு போராட்ட பாதையில் நம்மோடு தலைமை செயலக ஊழியர்களை இணைத்தது இடைவிடாத நமது போராட்டமும் உருக்குப்போன்ற நம் ஒற்றுமையும் தான்...

ஈரோடு பேச்சுவார்த்தையில் ஓடிப்போன சில தலைமைகளின் துரோகத்தால் இந்த போராட்டம் துவம்சம் செய்யப்பட்டபோது போராடும் குணாம்சம் கொண்ட தலைமைகள் எடுத்த வீரம் செறிந்த போராட்ட முடிவும்...

கடுமையான அரசியல் சூழ்நிலையில் இந்த அமைப்பு புதிய தோழர்களை அரவணைத்து கொண்டு சென்றதிலும் அவர்களின் நம்பிக்கையினை வென்றெடுத்ததிலும் மிகப்பெரிய சாதனையினை நிகழ்த்தியிருக்கிறது...

இறுதியாக நாம் வீழ்ந்திருக்க வேண்டிய இடம் உயர்நீதிமன்ற தடை...

சிறிய சறுக்கலை சந்தித்து அவசர அவசரமாக பணியேற்றதும்...

பின் மாநில தலைமை தடையினை மீறுவது என்றெடுத்த முடிவினை பிசகின்றி நிறைவேற்றியதும் மிகப்பெரிய வெற்றி...

இன்றைய நம் அமைப்பின் நிலைபாடு பின்னடைவு அல்ல...

யுத்த தந்திரமும் அல்ல...

நாம் பின் வந்து தாக்கப்போவதாக சொல்ல முடியாது...

*நல்ல முன்னேற்றம் இது...*

ஆம் ...

*இது யுத்த நிறுத்தம்*

நீதிமன்ற தடையினை எதிர்த்து போராட தயங்கி சில அரசியல் கட்சிகளே பின்வாங்கிய நிலையில், களமாடிய தோழர்களின் வீரம் புதிய உத்வேகம் வழங்கியிருக்கிறது.

இது தற்காலிக ஒத்திவைப்பு தான்...

08-09-2017 அன்று போராட்டத்தை விடுத்து பணியேற்க அறிவித்துவிட்டு மீண்டும் அன்றே திங்கள் அன்று வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்து களத்தை முற்றிலும் வலுவாய் கட்ட முடிந்த நமக்கு இனி ஒரு அறிவிப்பும், ஒரே இரவு கால இடைவெளியில் ஒரு போராட்டத்தினை அறிவித்து அதனை செயல்படுத்துவதும் எய்த இயலா இலக்கு அல்ல...

1988 போராட்டத்தில் கவர்னரிடம் அடுத்து வரும் அரசு பரிசீலிக்கும் என்ற  கடிதம் மட்டுமே பெற்று போராட்டத்தை முடித்துக்கொண்ட நாம் அந்த கோரிக்கையினை வென்றெடுத்தோம்...

2003 ல் உச்சநீதிமன்ற கண்டனத்துடன் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து  பணியேற்றும், எந்த கோரிக்கைகளுக்காக போராடினோமோ அந்த கோரிக்கையினை வென்றெடுத்தோம்...

ஆனால் இன்று...

*பேச மறுத்து ஆணவமாய் ஆணை அனுப்பிய தலைமை செயலாளரை கட்டுகளை தூக்கிக்கொண்டு நீதிமன்ற படியேற இந்த போராட்டம் பணித்திருக்கிறது...*

கடந்த போராட்டத்தில் பணிநீக்கத்தை சந்தித்து நீதிமன்ற தீர்ப்பில் குட்டுப்பட்ட நாம் இம்முறை நீதிமன்ற தீர்ப்பினை இலகுவாக கையாண்டிருக்கிறோம்...

*நீதி மன்றமே ஒரு வேளை நமக்கு எதிராக நின்றாலும் ஏற்கனவே தடையினை மீறி களமாடிய நமக்கு மீண்டும் தடை மீறி போராடுவது கடினமல்ல...*

இந்த நகர்வு கோரிக்கைகளின்பால் அழுத்தத்தை ஏற்படுத்தியதுடன் நீதிமன்ற மேற்பார்வையில் பேச்சுவார்த்தை என்பது மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்திற்கான சட்ட வடிவத்தினை மீட்டெடுத்திருக்கிறது...

இனி கால அவகாசம் கேட்டு கதை சொல்ல முடியாது, இந்த பேச்சுவார்த்தை ஆவணப்படுத்தப்படுவதோடு சட்டப்பூர்வமானதுமாகும்...

*நமது இலக்கு புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு...*

அதனை நோக்கிய நமது பயணத்தில் இன்றைய தேவை ஒற்றுமை கட்டுவதும் அதோடு உணர்வுப்பூர்வமாய் தொடர்ந்து போராடுவதும் தான்...

சில கருங்காலிகள்...

களமாட முடியாமல் ஓடிப்போனவர்கள்...

மாறுதல் நியமனங்களில் தரகு வேலை பார்ப்பதற்காக அமைச்சரின் கடைக்கண் பார்வை வேண்டி களத்திலே நம்மை காவு கொடுக்க துணிந்தவர்கள்...

விமர்சனங்களை பொருட்படுத்தாமல் அடுத்த கட்ட போராட்டத்திற்காக தயாராவீர்...

நாம் சறுக்கி விழுவோம் என எதிர்பார்த்து ஏமாந்தவர்களின் மனக்குமுறல் தான் அது...

அவர்கள் பிணம் திண்ணி கழுகுகள்...

களத்தில் எப்போது வீழ்வான் என எச்சில் ஒழுக காத்திருந்த கழுதைப்புலி கூட்டங்கள்...

உயர் நீதி மன்ற தடையினை மீறி நாம் களம் காண துவங்கிய போதே இவர்கள் ஆட்டம் கண்டு விட்டார்கள்...

இவர்களின் சேனைத்தளபதி, தலைமைசெயலக ஊழியர் சங்க கணேசனை தூக்கி எறிந்துவிட்டு களம் கண்ட தலைமைச்செயலக ஊழியர் சங்கம் இப்போது நம்மோடு போராடும் அணியில்...

இன்றைய நம் நிலைபாடு தலைகுனிவில்லை...

இது பின்னடைவும் இல்லை...

போர்நிறுத்த ஒப்பந்தம்...

நீதி மன்ற தடையினனை மீறி வரலாறு படைத்திருக்கிறோம்..

போராட துப்பில்லாமல் அதிகாரிகளின் அரசியல்வாதிகளிடம் விலைபோன களவானிகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை...

களம் எப்போதும் நம் கையில்...

இன்று வரிந்து கட்டிக்கொண்டு பதிவிடும் இவர்கள் இந்த ஒன்பது நாட்கள் வாய் திறக்காதது ஏன்?

போராட்டத்தை தொடர்ந்து நடத்தாமல் அதிகார வர்கத்திடம் விலைபோய்விட்டு தனது செல் போனை அணைத்து வைத்து ஒளிந்துகொண்டவர்கள் இன்று வாட்சப்பில் வசைபாடுகிறார்கள்

நமது  செல் போன்கள் எப்போதும் அணைக்கப்படுவதில்லை..

அமைப்பின் மீது கொண்ட நம்பிக்கையினை வலுப்படுத்தி காத்திருப்பாய் தோழா...

*தொழிலாளி வர்க்க வெற்றி சர்வ நிச்சயமே* என்ற *யூஜின் விடெப்ஸ்* வரிகளை நினைவுபடுத்தி காத்திருப்பாய் தோழா...

*கரம் கோர்க்க ...*
*களமாட...*

தோழமையுடன்,

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...