மாநில அளவில் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வானவர்கள் பட்டியல் மாநில அளவில் வரிசை எண் கொடுக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர் ஆனால் கலந்தாய்வில் உள்ளூர் காலிப்பபணியிடங்களுக்கு முதல் நாளும், வெளி மாவட்ட பணியிடங்களுக்கு அடுத்த நாளும்
கலந்தாய்வு நடத்தப்பட்டுவருகிறது, இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது, மிகவும் வருத்தத்திற்குரியது, ஏனெனில் ரேங்க் பட்டியலில் முன்னிலையில் இருந்தும் பெரும்பான்மையான தென்மாவட்டங்களில் காலிப்பபணியிடம் இல்லை என்ற காரணத்தால் பணிவாய்ப்பை இழப்பதோடு அருகே உள்ளே மாவட்டத்திற்கு கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது, ஆனால் ரேங்க் பட்டியலில் கடைசியில் இருக்கும் வட மாவட்ட தேர்வர்கள் கூட அருகிலேயே பணிவாய்ப்பை பெறும் சூழ்நிலை நிலவுகிறது,இது எப்படி சாத்தியம்? எல்லாமே மாநில அளவில் நடைபெறும் போது கலந்தாய்வு மட்டும் ஏன் உள்ளூர் மாவட்டம், பிற மாவட்டம் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படவேண்டும்? ஒரே நாளில் அனைத்து காலிப்பணியிடங்களும் காண்பிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் அவரவர் ரேங்க் லிஸ்ட் வரிசை எண் படி பணியிடங்களை தெரிவு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கலாமே?கடின உழைப்பு மூலம் ரேங்க் லிஸ்ட்டில் முன்னுரிமை பெற்றிருந்தும் சொந்த மாவட்டத்தில் பணிகிடைக்காத தென்மாவட்ட தேர்வர்களுக்கு அருகில் உள்ள மாவட்டத்திலாவது பணிகிடைக்க வாய்ப்பு உள்ளது, எனவே பல்வேறு உயர்சிந்தனைகளையும், எண்ணற்ற புரட்சி மாற்றங்களையும் செய்து வரும் நம் பள்ளிக்கல்வித்துறை ஒரே கட்டமாக கலந்தாய்வு நடத்தி ரேங்க் அடிப்படையில் அவரவர் விரும்பிய பணியிடத்தை உள்ளூர், வெளியூர் என்ற பேதத்தை கலைத்து தெரிவு செய்திட வாய்ப்பு வழங்கிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைப்பதோடு எதிர்பார்த்தும் ஆவலோடு காத்திருக்கின்றனர்"பள்ளிக்கல்வித்துறையைத்தவிர பிற அனைத்துத்துறைகளிலும் ஒரே கட்டமாக ஆன்லைனில் தரவரிசைப்படியே கலந்தாய்வு நடத்தப்படுகின்றன அங்கெல்லாம் உள்ளூர், வெளியூர் மாவட்டம் என்ற பேதம் என்பதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது "சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே நீதி "