தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ்


செப்., 5 க்குள் முழுமையாக விளக்கத்தை அளிக்க வேண்டும் என தினகரன் ஆதரவு
எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நோட்டீஸ்:

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனித்தனியாக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 30) சட்டசபை செயலரை சந்தித்து விளக்கமளித்திருந்தனர்.

செப்.,5க்குள்:

இந்நிலையில், சபாநாயகர் தனபால் மீண்டும் 19 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், செப்., 5ம் தேதிக்குள் முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அளித்த விளக்கத்தை இடைக்கால பதிலாகவே கருதப்படும் எனக்கூறியுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...