சசிகலா தரப்பினர் சொன்னதையே ஊடகத்தினரிடம் சொன்னதாக அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் தெரவித்துள்ளார்
எடப்பாடி அணியை சேர்ந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தான் ஜெயலலிதா இட்லி சாப்பிதாக கூறியது பொய் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதனால் பல தரப்பினர் ஜெ., மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து பல கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் : '' ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது சசிகலா தரப்பு என்ன கூறியதோ அதையே ஊடகத்தினரிடம் சொன்னோம். அமைச்சர் என்பதால் இப்பொழுது மக்களுக்கு உண்மையை கூறியுள்ளேன்.'' இவ்வாறு கூறினார்