மணப்பெண்ணின் நீளமான சேலையால் சர்ச்சை!!!


இலங்கையில் மணப்பெண்ணின் மூன்று கி.மீ சேலையைத் தூக்கி பிடிப்பதற்காக பள்ளிக் குழந்தைகளை
பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கையில் கண்டி மாவட்டத்தில் கடந்த செப் 21 ஆம் தேதி பிரமாண்டமாகத் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் கின்னஸ் சாதனைப் படைப்பதற்காக மணப்பெண்ணின் திருமண சேலை சுமார் 3.2 கிமீ நீளத்துக்கு தாயரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமணத்தன்று அவர் சேலையை உடுத்தியது போக மீதமுள்ளவற்றைத் தரையில் விழாமல் பிடிப்பதற்காக அரசுப் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

திருமணம் முடிந்து கண்டி முதன்மை சாலையில் ஊர்வலமாக நடந்து சென்றபோது 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேலை கீழே விழாதவாறு தூக்கி பிடித்துச் சென்றுள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மணமக்களுக்கு மலர் தூவ பயன்படுத்தப்பட்டுள்ளனர்.



இந்தத் திருமணத்தின் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் சரத் ஏகநாயகா கலந்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

மணப்பெண்ணின் சேலையை தூக்கிப் பிடித்தபடி செல்லப் பள்ளி குழந்தைகளைப் பயன்படுத்தியது குற்றம் . இதன் மூலம் குழந்தைகளின் கல்வி பாதிக்கும். இது அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை மீறிய செயல் என என்சிபிஏ தலைவர், மாரினி டி லிவர்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...