100 ஆண்டுகள் பழமையான அரசு நிறுவனம் மூடப்படுகிறது!!!


புதுடில்லி:மத்திய அரசுக்கு, 100 ஆண்டுகளாக, பொருட்களை கொள்முதல்
செய்ய உதவி வந்த, டி.ஜி.எஸ்., அண்ட் டி., என்ற அமைப்பு, இந்த மாதத்துடன் மூடப்படுகிறது.

இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரிகள் கூறியதாவது:பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அரசுக்கு, பொருட்கள் கொள்முதல், வினியோகம் ஆகியவற்றை கவனிப்பதற்காக, டி.ஜி.எஸ்., அண்ட் டி., எனப்படும், சப்ளை, வினியோகங்கள் பொது இயக்ககம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், இணைய வழியில் பொருட்களை கொள்முதல் செய்து வினியோகிக்கும், ஜி.இ.எம்., எனப்படும், 'இ - மார்க்கெட் பிளாட்பார்ம்' கடந்தாண்டு, மத்திய வர்த்தகத் துறையால் துவக்கப்பட்டது. இதையடுத்து, டி.ஜி.எஸ்., அண்ட் டி., நிறுவனம், வரும், 31ம் தேதியுடன் மூடப்படுகிறது.டி.ஜி.எஸ்., அண்ட் டி., நிறுவனத்தின், 1,100 ஊழியர்கள், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு மாற்றப்படுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...