சுற்றுலா துறையில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்’

புதுடில்லி, அக். 25–‘‘சுற்­றுலா துறை­யில், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 10
கோடி வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்க, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது,’’ என, மத்­திய சுற்­றுலா துறை அமைச்­சர், கே.ஜே.அல்­போன்ஸ் தெரி­வித்து உள்­ளார்.அவர் மேலும் கூறி­ய­தா­வது:இந்­தி­யா­வுக்கு, ஆண்­டு­ தோ­றும், 1.44 கோடி வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­யர் வரு­கின்­ற­னர். அவர்­களின் செல­வி­னங்­கள் வாயி­லாக, 1.56 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பிற்கு, அன்­னிய செலா­வணி வரு­வாய் கிடைக்­கிறது.அடுத்த ஐந்து ஆண்­டு­களில், வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­ய­ரின் எண்­ணிக்­கையை, நான்கு கோடி­யாக உயர்த்த இலக்கு நிர்­ண­யித்து உள்­ளோம். இதன் மூலம், சுற்­றுலா துறை­யில், 10 கோடி பேர் வேலை­வாய்ப்பு பெறு­வர். தற்­போது, 4.30 கோடி பேர், இத்­து­றை­யில் வேலை­வாய்ப்பு பெற்­றுள்­ள­னர்.நட்­சத்­திர ஓட்­டல்­களில், 7,500 ரூபாய்க்கு மேல் உள்ள அறை வாட­கைக்கு விதித்­துள்ள, ஜி.எஸ்.டி.,யை குறைக்க வலி­யு­றுத்­தப்­படும். மேலும், ஓட்­டல்­க­ளுக்கு, அடிப்­படை கட்­ட­மைப்பு அந்­தஸ்து வழங்­கி­னால், குறைந்த வட்­டி­யில் கடன் பெற­லாம். மாநில அர­சு­களும், ஓட்­டல் கட்ட நிலம் ஒதுக்க முடி­யும்.மத்­திய அரசு, தொழில் துவங்­கு­வதை சுல­ப­மாக்கி உள்­ளது. இருந்த போதி­லும், ஓட்­டல் கட்ட, 70 வகை உரி­மங்­களை பெற வேண்­டி­யுள்­ளது; இது, எளி­மை­யாக்­கப்­படும். தினம், 2,000 ரூபாய்க்­கும் குறை­வான வாடகை உள்ள, இரண்டு லட்­சம் ஓட்­டல் அறை­க­ளுக்கு பற்­றாக்­குறை உள்­ளது. அத­னால், இப்­பி­ரி­வில் ஏரா­ள­மான முத­லீட்டு வாய்ப்­பு­கள் உள்ளன.இவ்­வாறு அவர் கூறினார்.
தத்தெடுப்புஇந்­தி­யா­வில், உலக பாரம்­ப­ரிய சின்­னங்­க­ளாகவிளங்­கும், ஏழு சுற்­றுலா தலங்­களை, பொது மற்­றும் தனி­யார் துறை நிறு­வ­னங்­கள் தத்­தெ­டுத்து உள்ளன. இவ்­வி­டங்­கள், சர்­வ­தேச தரத்­தில் மேம்­ப­டுத்­தப்­படும்.ராஷ்மி வர்மாசெயலர், மத்திய சுற்றுலா துறை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...