✴சிறப்பு மருத்துவர் வசதியுடன் உயிருக்கு போராடுபவர்களுக்கு உதவும் ஆதரவற்றோர் இல்லம்: ஒரே கல்லறையில் 1,579 உடல்கள் அடக்கம்

மதுரை:  உயிருக்கு போராடும் மற்றும் மனநலம் பாதித்த முதியவர்களை அரவணைக்க கொடைரோடு
அருகே ஆதரவற்றோர் இல்லம் இயங்கி வருகிறது. இங்கு உயிரிழக்கும் முதியவர்கள் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்படுகின்றனர். மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் சுற்றி வரும் ஆதரவற்றோர் மற்றும் வாழ்க்கையின் இறுதிக்கட்ட நிலையில் உள்ளவர்களை திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மேட்டூர் கேட் என்ற இடத்தில் உள்ள கருணை இல்லத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
கடந்த 2006ல் துவக்கப்பட்ட இந்த கருணை இல்லத்தில், தற்போது 140 பெண்கள், 185 ஆண்கள் என 325 பேர் உள்ளனர். இங்கு அழைத்து வரப்படும் நபரை, முதலில் குளிக்க வைத்து அவர்களது முடி, சடைகளை எடுத்து, காயங்களுக்கு சிசிச்சை, புதிய ஆடைகளை வழங்குகின்றனர். பின்பு அவர்களுக்கு தரமான உணவு வழங்கி, இறப்பு வரை பராமரிக்கின்றனர். இறந்த பின் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்கின்றனர். கடந்த 11 ஆண்டுகளில் இதுவரை 1,579 பேர் உயிரிழந்துள்ளனர். 4,800 பேர் குணமடைந்து வெளியே சென்றுள்ளனர்.

பெரும்பாலும் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அதிக பேர் இங்கு வருகின்றனர். இவர்களை பராமரிப்பதற்காக ஒரு மருத்துவர் உள்ளார். 24 மணிநேரமும் அர்ப்பணிப்பு உணர்வு, சகிப்புத்தன்மையோடு செவிலியர்களும் பணியாற்றுகின்றனர். வீணாகும் பொருட்கள், கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி பயன்படுத்தி வருகின்றனர். அரசு உதவிகள் எதுவுமின்றி பொதுமக்கள் நன்கொடையால் மட்டுமே இந்த இல்லம் இயங்கி வருகிறது. இல்ல நிர்வாகி அருட்தந்தை தாமஸ் கூறுகையில், ‘‘11 ஆண்டுகளாக திண்டுக்கல்லை மையமாக வைத்து ஆதரவற்றவர்களை எங்கள் இல்லத்தில் சேர்த்து பராமரித்து வருகிறோம். தற்போது 500 நபர்கள் உள்ள இரண்டாவது கருணை இல்லம் செங்கல்பட்டிலும், காஞ்சிபுரம், தாம்பரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் புதிய இல்லங்களை உருவாக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பராமரித்து வருகிறாம். இதனால் பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். எனவே, தொழிலதிபர்கள் மற்றும் நல் உள்ளங்களின் உதவியை எதிர்நோக்கி உள்ளோம்,’’ என்றார்.

ஒரே கல்லறையில்...
இல்ல ஊழியர்கள் கூறுகையில், ‘‘பெற்ற மகன்கள், உறவினர்களால் கைவிடப்பட்டு கடைசி நிலையில் தவித்து வரும் ஆதரவற்றவர்களை தேர்ந்து எடுத்து உதவி வருகிறோம். நோயில் சிக்கி பலர் இங்கு வந்தவுடன் சில நாட்களில் உயிரிழந்து விடுகின்றனர். இவர்களை அரசு அனுமதியுடன் இங்கு இருக்கும் கல்லறையில் அடக்கம் செய்து விடுவோம். ஒரே கல்லறையில் ஆழமான பகுதியை ஏற்படுத்தி குறுகிய இடத்தில் உடலை அடக்கம் செய்து, சிமென்ட் கலவையில் பூசி விடுவதால், அந்த உடல் உருகி ஆழமான குழியில் விழுந்து விடும். 2006 முதல் இதுவரை 1,579 உடல்கள் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது,’’ என்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...