கும்மிடிப்பூண்டியை அடுத்த நாயுடுகுப்பம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், முன்னாள் ஒன்றிக்குழுத்தலைவர் குணம்மா கோபால்நாயுடு, கூட்டுறவு வங்கி இயக்குனர் டி.சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை 94 பேருக்கும், உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கான உதவித்தொகை 6 பேருக்கும், 69 பயனாளிகளுக்கு பட்டாவும், 50 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகளும் வழங்கப்பட்டது.
முன்னதாக தலைமை உரையாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் முத்து பேசும்போது கூறியதாவது:-
ஸ்மார்ட் கார்டு இனி முழுமையான பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டு வருகிற 31-ந் தேதி வரைதான் செல்லுபடி ஆகும். வருகிற 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் மட்டும்தான் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். எனவே உரிய ஆவணங்களையும், குடும்பத்தலைவரின் புகைப்படத்தையும் கொடுத்து ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை தாமதமின்றி பெற்று கொள்ளலாம்.